திருவெண்காட்டுப் புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவெண்காட்டுப் புராணம் [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ எல்லப்ப நாவலர் என்பவரால் இயற்றப்பட்டது. திருவெண்காடு ஊரிலுள்ள பெருமான்மீது இந்தப் புராணம் பாடப்பட்டுள்ளது. இப் புலவர் திருத்தொண்டர் புராண சாரம் என்னும் நூலையும் பாடியிருக்கிறார்.

பாயிரம் மற்றும் 18 சருக்கங்கள் கொண்ட இந்த நூலில் 614 பாடல்கள் உள்ளன.

பாடல் - எடுத்துக்காட்டு[தொகு]
பன்னு சிவநெறி வளர வேண்டிபு, பரஞ்சோதி அடிகள் இந்தப் பதியின் மேவி
மன்னு புகழ்ச் சுவேதனப் பெருமான் இங்கே, வருக என விளம்புதலும் மவுனம் நீங்கி
தன்னிகர் இல் அவனது அருள் பெற்றுச் சைவ, சந்தான நெறி தழைக்கத் தமிழ்நூல் செய்தோன்
அன்னையின் அன்புடையவன் மெய்கண்ட தேவன், அடியவருக்கு அடியவர் தாள் அகத்தில் சேர்ப்பாம். [2] [3]

மெய்கண்டார் மூன்று வயது வரையில் மௌனமாயிருந்தார், பரஞ்சோதி முனிவர் உபதேசம் பெற்ற பின் பேசினார், தாய்மாமன் திருவெண்ணெய் நல்லூர்க் காங்கேய பூபதியால் வளர்கப்பெற்றார் - என்னும் செய்திகளை இப்பாடல் தெரிவிக்கிறது.

பதிப்பு[தொகு]

இந்தப் புராணம் இந்த நூலாசிரியரின் மரபில் வந்தோரால் 1905 ஆம் ஆண்டு பெருந்தோட்டம் ஆசிரியர் துரைசாமிப் பிள்ளை பார்வையில், சென்னை ஈக்காடு, இரத்தினவேலு முதலியாருடைய பண்டித மித்திர அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 153. 
  2. எண்சீர் விருத்தப் பாடல்
  3. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது