திருவிதாங்கூர் வணிக வளாகம்
திருவிதாங்கூர் வணிக வளாகம் என்பது இந்தியா, கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகமாகும்.[1]மலபார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டது. இது திருவனந்தபுரத்தின் முதல் வணிக வளாகமாகும். இந்த வளாகம் மலபார் குழும நிறுவனத்தால் 2014 இல் தொடங்கப்பட்டு 2018 ல் கட்டி முடிக்கப்பட்டது. இது 700,000 சதுர அடி (65,000 மீ 2) பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த வளாகத்தில் மூன்று தளங்கள் சில்லறை விற்பனைக்காகவும் இதில் 300 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் உள்ளனர்.[2] [3]
அமைவிடம்
[தொகு]இந்த வணிக வளாகமானது திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை 66 ல் ஈஞ்சக்கல்,சாக்கை சந்திப்பில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது.
வசதிகள் மற்றும் அம்சங்கள்
[தொகு]இந்த வளாகத்தில் மூன்று தளங்களில் 6.5 லட்சம் சதுர அடிக்கு மேல் பரப்பளவு உள்ளது, கிட்டத்தட்ட 150 கடைகள் உள்ளது. கார்னிவெல் சினிமா அரங்கங்கள்,ஒரு பெரிய பல்பொருள் அங்காடியும்.நகைக் கடைகள், மின் சாதனப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், நவீன வாழ்க்கை முறை பொருட்கள், 9 பரிமாணத் திரையரங்கு, ஒரு 15,000 சதுர அடி விளையாட்டு பகுதி 1.5 சுமார் 1,000 கார்கள் மற்றும் 1,200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் ஆகியவை இந்த வளாகத்தில் உள்ளன[4]
பசுமை வளாகம்
[தொகு]இந்தியாவின் முதல் பசுமையான வளாகம் ஆகும்[5]திருவாங்கூர் மால் சுற்றுப்புறசூழல் மாசுபடாத தன்மையில் அமைக்கப்பட்டுள்ளது. வளாக முகப்பில் 70 சதவிகித சுவர்கள் மீது செங்குத்தான தோட்டம் உள்ளது. இந்த மாலில் ஒவ்வொரு நாளும் 2.5 டன் கழிவுகளை சுத்திகரிக்கும் திறன் கொண்ட மூன்று கரிம கழிவு மாற்றிகள் உள்ளன. மற்ற கழிவுகளை நிர்வகிக்க, இந்த மாலில் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் உள்ளது, இது ஒரு நாளைக்கு மூன்று லட்சம் லிட்டர் கழிவுகளை பதப்படுத்தும் திறன் கொண்டது. வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை இந்த வளாகம் கட்டுப்படுத்துகிறது.