திருப்பி ஒன்றைச் செய்யாதே
Jump to navigation
Jump to search
திருப்பி ஒன்றைச் செய்யாதே என்பது ஒரு கணினியியல் கருத்துரு. தகவல் பல இடங்களில் நகல் செய்யப்படக்கூடாது என்பது இதன் கொள்கைகளில் ஒன்று. தரவு தள வடிவமைப்பில், நிரலாக்கத்தில் இக் கொள்கை நடைமுறையில் பயன்படுகிறது.
வெட்டி ஓட்டுவதில் உள்ள சிக்கல்கள்[தொகு]
ஒரே தகவலை அல்லது செயற்பாட்டை பல இடங்களில் வெட்டி ஒட்டுவதால் பல சிக்கல்கள் எழலாம்.
- திருத்தங்கள் செய்வது கடினமாகிறது (எ.கா ஒரு தரவு மாறினால், எல்லா இடங்களிலும் ஒத்த மாற்றங்கள் செய்ய வேண்டும். கவனம் தவறினால் பிழைத்து விடும்.)
- ஒத்திசைவு குறைய வாய்ப்புக்களை கூட்டுகிறது.
- தெளிவின்மையைக் கூட்டலாம்.