திருப்பம் (இயற்பியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்பியலில் திருப்பம் (moment) எனும் பதம் வேறுபட்ட பல எண்ணக்கருக்களை விளக்கப் பயன்படுகின்றது. இயற்பியல் கணியம் ஒன்று நீள அலகு ஒன்றினால் பெருக்கப்படுவதைத் திருப்பம் என பொதுவில் குறிப்பிடலாம்.

விசையின் திருப்பம்[தொகு]

விசையின் திருப்பம் எனப்படுவது விசை காரணமாக செகிழ்ச்சியுறாத பொருளொன்றில் ஏற்படும் திரும்பல் விளைவு ஆகும். கணித ரீதியில் ஒரு அச்சு பற்றி பொருளொன்றை திருப்ப முனைகின்ற விசையினதும் விசையின் தாக்கப் புள்ளியில் இருந்து திரும்பல் அச்சுக்கான செங்குத்துத் தூரத்துக்குமான பெருக்கம் திருப்பத்தைத் தரும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பம்_(இயற்பியல்)&oldid=3388532" இலிருந்து மீள்விக்கப்பட்டது