உள்ளடக்கத்துக்குச் செல்

திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழ் என்பது சைவ நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் என்பவரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு திரு. சொக்கலிங்கய்யா என்பவரால் இயற்றப்பட்டதாகும். இது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். காப்புச் செய்யுள் ஒன்றுடன் பருவம் ஒன்றிற்குப் பத்து பாடல்கள் வீதம் 101 பாடல்கள் கொண்டது. இந்நூலின் காப்புச் செய்யுளில் சிவ பெருமான் முதலிய சைவ சமய வழிபாட்டுப் பெருங்கடவுளர்களுடன் சமயக் குரவர் நால்வரையும், திலகவதியாரையும் சேர்த்து ஆசிரியர் போற்றியுள்ளார். காலம் 20 ஆம் நூற்றாண்டு.

உசாட்த்துணை

[தொகு]

கு. முத்துராசன் அவர்கள் எழுதிய பிள்ளைத்தமிழ் இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம். -1984