தியான்கே-2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தியான்கே-2
இடம்சீனா
கட்டமைப்புஇன்டெல் சியான்(Xeon), சியான் பை(Xeon Phi), கைலின் லினக்சு[1]
சக்தி17.6 MW (24 MW with cooling)
நினைவகம்1,375 TiB (1,000 TiB CPU + 375 TiB coprocessor)
சேமிப்பகம்12.4 PB
வேகம்33.86 ஐம்மிதப்புப் புள்ளிச் செயல்பாடு
நோக்கம்ஆராய்ச்சி மற்றும் கல்வி

தியான்கே-2 அல்லது TH-2 (தமிழ்: பால் வழி-2) என்பது 33.86[2] ஐம்மிதப்புப் புள்ளிச் செயல்பாடு கொண்ட சீனாவின் மீத்திறன் கணினியாகும்.அதாவது ஒரு வினாடியில் 33,860 ட்ரில்லியன் கணித்தல்களைச் செய்யக்கூடியது [1] 2015-ம் ஆண்டு வர இருந்த இக்கணினி 2013-ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டது. [3] இது உலகின் மிக வேகமான கணினியாக ஜூன் 2013-ல் அறிவிக்கப்பட்டது. சீனாவின் சங்காசா நகரிலுள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள இம் மீத்திறன் கணணியானது 3.12 மில்லியன் ப்ரோசெசர் இணைப்புகளை கொண்டுள்ளது. இன்டெல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஐவி பிரிட்ஜ் மற்றும் சியோன் பி ஆகிய கம்ப்யூட்டர் சில்லுகள் தியான்கே-2 மீத்திறன் கணனியில் பயன்படுத்தப்படுகின்றன. மேம்படுத்தல்களை மேற்கொள்வதன் மூலம் தியான்கே-2 மீத்திறன் கணனியின் வேகத்தை 54.9 ஐம்மிதப்புப் புள்ளிச் செயல்பாடு வரை அதிகரிக்க கூடியதாக இருக்கும் என்பது கணணி விற்பன்னர்களின் கருத்தாகும்.லினக்ஸ் வகை இயங்குதளமான கைலின் மூலம் இயக்கப்படவிருக்கும் தியான்கே-2 மீத்திறன் கணனி இதற்கு முன்னர் உலகின் அதிவேகக் கணணியாக இருந்த அமெரிக்காவின் டைட்டான் மீத்திறன் கணணியை போல் ஏறத்தாழ இரண்டு மடங்கு வேகமுடையதாக காணப்படுகின்றது. அமெரிக்க சக்திவளத்துறையினரால் பயன்படுத்தப்படும் டைட்டான் மீத்திறன் கணனியின் உச்சபட்ச செயற்பாட்டு திறன் 17.59 ஐம்மிதப்புப் புள்ளிச் செயல்பாடு ஆகும். தியான்கே-2 மீத்திறன் கணனியானது குவான்சு நகரிலுள்ள தேசிய மீத்திறன் கணனி நிறுவகத்தில் நிறுவப்பட்டு தென்சீனாவின் கல்வி மற்றும் ஆய்வுகளிற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. 1.0 1.1 Dongarra, Jack (3 June 2013). "Visit to the National University for Defense Technology Changsha, China" (PDF). Netlib. பார்த்த நாள் 17 June 2013.
  2. "June 2013". TOP500. பார்த்த நாள் 17 June 2013.
  3. Michael Kan, IDG News Service (2012-10-31). "China is building a 100-petaflop supercomputer". infoworld.com. பார்த்த நாள் 2012-10-31.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியான்கே-2&oldid=2918286" இருந்து மீள்விக்கப்பட்டது