திணைமாலை நூற்றைம்பது பழைய உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் தோன்றியவை.[1]

கணிமேதாவியார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட திணைமாலை நூற்றைம்பது நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. உரை ஆசிரியர் பெயர் தெரியவில்லை.[2]

இந்த உரை முதல் 127 பாடல்களுக்கு மட்டுமே உள்ளது. அகத்திணைகளுக்குத் தெளிவான விளக்கத்துடன் பொழிப்புரையாக உள்ளது.

இலக்கணக் குறிப்பு
விளக்கம்

என்னும் உரைப்பாங்குகளும் உள்ளன

இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. டாக்டர். மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு.
    • 1908 செந்தமிழ், ரா. ராகவையங்கார் பதிப்பு