உள்ளடக்கத்துக்குச் செல்

திணிவுக் காப்பு விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூடிய தொகுதி ஒன்றில் நடைபெறும் வேதியியல் தாக்கங்களில் பங்குகொள்ளும் தாக்கிகளின் மொத்த திணிவானது தாக்கத்தின் போது கிடைக்கும் விளைவுகளின் மொத்த திணிவுக்கு சமனாகக் காணப்படும் என்பது திணிவு மாறா விதி அல்லது திணிவுக்காப்பு விதி எனப்படும். இதன் படி தாக்கிகளின் மொத்தத் திணிவு விளைவுகளின் மொத்தத் திணிவுக்குச் சமனாகக் காணப்படும். திணிவுக் காப்பு விதியைப் பிரான்சு நாட்டு அறிவியலாளரான அன்ரனி லாவோசியர் முன்மொழிந்தார்.

இவ்விதி மூலம் கூறப்படுவது: ஒரு இரசாயனத் தாக்கத்தின் போது புதிதாக அணுக்கள் உருவாகுவதோ அல்லது அழிவடைவதோ இடம்பெறாது. அணுக்கள் மீள் ஒழுங்கு செய்யப்படுதலே இடம்பெறுகிறது. இதன் காரணமாக திணிவில் எந்தவொரு மாற்றமும் இடம்பெறாது.

வரலாறு

[தொகு]

திணிவுக் காப்பு விதியை முதன்முதலில் ஒரு கோட்பாடாக வெளியிட்டவர் அன்டணி லவோசியர்(1743–1794). ஆயினும் இது பற்றி 1748இல் மைக்கேயில் லொமோனோசோவ் (1711–1765) இதற்குச் சமமான கருத்தை வெளியிட்டதாகவும் அதைப் பரிசோதனை ரீதியில் உறுதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. *Pomper, Philip (October 1962). "Lomonosov and the Discovery of the Law of the Conservation of Matter in Chemical Transformations". Ambix 10 (3): 119–127. 
    Lomonosov, Mikhail Vasil’evich (1970). Mikhail Vasil’evich Lomonosov on the Corpuscular Theory. Henry M. Leicester (trans.). Cambridge, Mass.: Harvard University Press. Introduction, p. 25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திணிவுக்_காப்பு_விதி&oldid=2579374" இலிருந்து மீள்விக்கப்பட்டது