திசை பலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராமத்தில் நடத்தப்பட்ட திசைபலி.

திசை பலி என்பது இந்து மதம் சார்ந்த கிராமத்துக் கோயில் நிகழ்வாகும். இதை திசை வெலி எனவும் குறிப்பிடுவர். கிராமத்துக் கோயில் திருவிழாவின் போது கிராமத்தின் நான்கு திசைகளிலுமுள்ள எல்லைகளில் தீய சக்திகள் கிராமத்தை அண்டாத வண்ணம் கொடுக்கப்படும் பலியாகும். இப்பலியானது நள்ளிரவு பன்னிரெண்டு மணியளவில் காவல்தெய்வத்திற்கு சாமியாடும் நபரால் நிகழ்த்தப்படுகிறது.

பலி கொடுக்கும் முறை[தொகு]

நள்ளிரவு பூஜை முடிந்ததும் சாமியாடுபவர் மற்றும் சிலர் நான்கு எல்லைகளுக்கும் சென்று வாழை இலையின் மீது தடியன்காய் ஒன்றை வைத்து அது இரண்டாக வெட்டப்பட்டு அதில் குங்குமம் தூவப்படும். பின்னர் மண் கலையம் ஒன்றினுள் சிறு தீப்பந்தம் கொளுத்தி வைக்கப்படும். கடைசியாக தேங்காய் ஒன்றின் மேல் நாட்டுக் கோழி முட்டை ஒன்றை கிடைமட்டமாக வைத்து இரண்டும் ஒரே நேரத்தில் சரிபாதியாக வெட்டப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திசை_பலி&oldid=3723439" இலிருந்து மீள்விக்கப்பட்டது