திசைகாட்டும் கருவிகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு நகரக்கூடிய போக்கு திசை என்று பெயர்.திசையை அறியப்பயன்படும் காந்தக்கருவி. திசையைக் காட்டிய முதன்முதலில் எடுத்துக் குறிப்பிட்டவர் அலெக்சாண்டர் நெக்காம் என்ற துறவியாவார்.
திசைக்காட்டியின் வகைகள் 1) நிலத்திசைக்காட்டி 2) கடல் திசைக்காட்டி 3) வானூர்தி திசைக்காட்டி
நிலத்திசைக்காட்டி
கையடக்கமான திசைக்காட்டி. இந்த திசைக்காட்டியை சாரனர், நில ஆய்வாளர், காநல்நடைப்பயணம் மேற்கொள்வோர் ஆகிய அனைவரும் பயன்படுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு முக்காலியின் மீது சரிவு கோணத்தை அளக்க ஏற்றவாறு ஒரு தொலைநோக்கியும் பொருத்தப்பட்டிருக்கும். இக்கருவி சமதள நில அளவீட்டு ஆய்வுக்காக பயன்படுகிறது.
கடல்திசைக்காட்டி
கடற் பயணங்களின்போது கப்பல் செல்லும் கடல்திசையை அறிய இந்த கடல் திசைக்காட்டி பயன்படுகிறது. இது தானாக மட்டத்தைச் சரிபடுத்திக் கொள்ளும் அமைப்புடையது. எடையற்ற வட்ட அட்டையில் 360 டிகிரி கோண குறியீடுகள், காந்த குறிமுள்ளின் கீழே பொருத்தப்பட்டிருக்கும்.
வானூர்தி திசைக்காட்டி
விமானத்திசைக்காட்டியல் வட்டத்தகட்டு அடைக்குப் பதிலாக உருளை வடிவ அட்டையின் வெளிப் பரப்பில் கோணங்கள் குறிக்கப்பட்டிருக்கும். நீர்மம், நிரப்பப்பட்ட பெட்டியிலுள்ள அளவுகோள் ஒரு கண்ணாடி ஜன்னல். முன் பொருத்தப்பட்டிருக்கும் இத்திசைக் காட்டியில் ஏற்படும் குறைகளைத் தவிர்க்க இது மின் கருவிகளிலிருந்து தொலைவில் பொருத்தப்பட்டிருக்கும்.
12ம் நூற்றாண்டு திசைக்காட்டி வட்ட அளவுகோலில் பிரிக்கப்பட்டிருந்தது. எட்டு சம பாகங்களாகவும், அவை ஒவ்வொன்றும் 1 பாகை இடைவெளியில் நான்கு சம பிரிவுகளாக பிரிக்கப்பட்ட திசை காட்டிகளாக இருந்தன.
காம்பஸ்
காம்பஸ் என்பது ஒரு திசைகாட்டும் கருவி. இதில் காந்த ஊசிகள் பொருத்தப்பட்டிருக்கும். காந்த ஊசியை எப்படித் திருப்பி வைத்தாலும் அதன் முனைகள் வடக்கு, தெற்கு நோக்கியே இருக்கும்.
1) 11ம் நூற்றாண்டில் இது கடலோட்டிகளுக்குத் திசைக் காட்டப் பயன்படுத்தப்பட்டது. 2) ஊசியின் முனை தெற்கு நோக்கிக் காட்டும். 3) 12ம் நூற்றாண்டில் பாலஸ்தீனம் வந்த கார்டினல் காம்பஸ் இந்தியாவிலிருந்து வந்தது என்றார். 4) சீனர்கள் காம்பஸை மேஜிக் செய்வதற்காக பயன்படுத்தினார்கள். 5) அரேபியர்கள் கப்பலுக்கு திசைக்காட்டும் கருவியாக பயன்படுத்தினர். 6) காம்பஸ் முனைகளில் காந்தம் இருப்பதால் வடக்கு தெற்காக திசை காட்டுகிறது. இதற்கு காரணம் பூமியின் ஒரு காந்தம் போல இருப்பதால்தான்,
காந்தத்தின் அச்சும் பூமி சுழம் அச்சும் ஒரே திசையில் உள்ளது.
7) காந்த துருவங்கள் ஒன்றையொன்று கவர்ந்து இழுக்கும் தன்மை உடையது. ஆகையால் காந்த ஊசியின் வடதென் முநைகள் பூமியின் தெற்கு வடக்கு காந்த துருவங்களை நோக்கி திரும்பி விடுகிறது. காந்த ஊசிகள் வடக்கு தெற்கு திசைகளைக் காட்டி வருவதால் மற்ற இரு திசைகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது,
மேற்கோள் நூல்கள் விஞ்ஞானத் தேடல்கள் அறிவியல் களஞ்சியம்