திக் நியாட் ஹன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:42, 27 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category பௌத்த எழுத்தாளர்கள்)
திக் நியாட் ஹன்
பாரீசில் நியாட் ஹன் (2006)
மற்ற பெயர்கள்Thầy (ஆசான்)
பட்டம்Thiền Sư
(Zen master)
சமயம்Thiền Buddhist

உலகில் தற்போது மிகவும் அறியப்பட்ட சில ஜென் ஆசான்களுள் நியாட் ஹன் குறிப்பிடத்தக்கவர். இவர் மாணவர்களால் ஆசான் என்ற பொருளில் அமையும் தே (Thay) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் உலக அமைதிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடுபவர் மற்றும் கவிஞர்.

பிறப்பு

1926 ஆம் ஆண்டு மத்திய வியட்நாமில் பிறந்த நியாட் ஹன் பதினாறாவது வயதில் துறவு மேற்கொண்டார்.

சமூக நலப்பணிகளுக்கான இளைஞர் பள்ளி

1960- ஆம் ஆண்டில் சைகானில் சமூக நலப்பணிகளுக்கான இளைஞர் பள்ளியைத் (School of Youth for Social Services (SYSS)) தொடங்கினார்.

இப்பள்ளியின் பணிகள்

  • குண்டுத் தாக்குதலுக்குள்ளான கிராமங்களைச் சீரமைத்தல்
  • பள்ளிகள் தொடங்கல்
  • மருத்துவமனைகள் தொடங்கல்
  • வியட்நாம் போரில் வீடிழந்த குடும்பங்களை மீள் குடியமர்த்துதல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்_நியாட்_ஹன்&oldid=2222063" இலிருந்து மீள்விக்கப்பட்டது