தாழ்வாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தட்சிண சித்ராவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு திருநெல்வேலி அக்ரகார வீடுகளில் தெருவை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள தாழ்வாரம்

தாழ்வாரம் என்பது தென் இந்தியாவின் பாரம்பரிய வீட்டுகளின் வாயிலின் இருபக்கமும் உள்ள திறந்த அமைப்பு ஆகும். இது வீட்டின் தலை வாசலுக்கு முன்பு தெருவை ஒட்டி, வீட்டின் முகப்பில் ஓடுகளைச் சரித்து இறக்கி, அதைத் தூண்களால் தாங்கிப் பிடிக்குமாறு கட்டப்பட்டிருக்கும். மேலே கூரை, வீதிப்பக்கம் திறந்தவெளி என்ற அமைப்புடன் தாழ்வாரம் அமைந்திருக்கும். பெரும்பாலான வீடுகளில் தாழ்வாரப் பகுதியில் திண்ணைகளும் அமைக்கப்பட்டிருக்கும். அந்த திணைணையானது வழிப்போக்கர்கள் அமர்ந்து செல்லும் நிழல் கொண்ட பகுதியாக இருக்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாரி (2017 அக்டோபர் 14). "எல்லோருக்குமான ஓர் இடம்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 15 அக்டோபர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாழ்வாரம்&oldid=2434096" இருந்து மீள்விக்கப்பட்டது