தாரா ஏர் விமானம் 197

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாரா ஏர் விமானம் 197
Tara Air Flight 197
தரையில் இருக்கும் இரட்டை இயந்திரப் பயணிகள் விமானம்
9என்-ஏஈடி, விபத்தில் சிக்கிய விமானம், 2009 இல் எடுக்கப்பட்ட படம்
விபத்து சுருக்கம்
நாள்மே 29, 2022 (2022-05-29)
சுருக்கம்தரையில் மோதியது, விசாரணையில் உள்ளது
இடம்தசாங்கு-2, முசுதாங்கு மாவட்டம்
பயணிகள்19
ஊழியர்3
உயிரிழப்புகள்22[1]
தப்பியவர்கள்0
வானூர்தி வகைடி அவில்லேண்டு கனடா நிறுவனம் டிஎச்சி 6 இரட்டை இயந்திரம்
இயக்கம்தாரா விமானம், எட்டி விமான நிறுவனம்
வானூர்தி பதிவு9என்-ஏஈடி
பறப்பு புறப்பாடுபொக்காரா விமான நிலையம், நேபாளம்
சேருமிடம்இயோம்சம் விமான நிலையம் , நேபாளம்

தாரா ஏர் விமானம் 197 (Tara Air Flight 197)[2] 2022 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதியன்று நேபாள நாட்டின் பொக்காராவிலிருந்து இயோம்சோமுக்கு புறப்பட்டு சிறிதுநேரத்தில் மாயமாகி விபத்திற்கு உள்ளானது. தாரா ஏர் விமானம் எட்டி விமான நிறுவத்தால் இயக்கப்படுகிறது. இது 9 என்-ஏஈடி இரட்டை இயந்திர வகை உள்நாட்டு போக்குவரத்து சிறிய இரக விமானமாகும். தலைநகர் காட்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள பொக்காரா மாநகரிலிருந்து வடமேற்கில் 80 கிமீ தொலைவில் உள்ள கண்டகி பிரதேசத்தின் இயோம்சோம் நகருக்கு காலை 9.55 மணியளவில் விமானம் புறப்பட்டது. புறப்பட்டு சுமார் 12 நிமிடங்கள் கழித்து 10:07 மணிக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பிழப்பு ஏற்பட்டது.[3][4][5][6] விமானத்தில் நான்கு இந்தியர்கள் மற்றும் இரண்டு செருமானியர்கள் உள்பட நேபாள குடிமக்கள் 19 பேர் பயணம் செய்துள்ளனர். விபத்தில் 22 பயணிகளும் கொல்லப்பட்டனர். 20 மணி நேரம் கழித்து ஒரு மலைப்பகுதியில் அனைவரது உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது.[7] இவ்விபத்து இந்தப் பாதையில் நிகழ்ந்த தாரா ஏர் விமானத்தின் இரண்டாவது விமான விபத்து என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2016 ஆம் ஆண்டு விமானம் 193 விபத்துக்கு உள்ளாகி 23 பயணிகள் கொல்லப்பட்டது முதல் நிகழ்வாகும்.[8]

பாதிக்கப்பட்டவர்கள்[தொகு]

நேபாள குடிமக்கள் மற்றும் விமானத்தில் பணியாளர்கள் உள்பட 22 பயணிகள் விமானத்தில் பயணித்துள்ளனர். [9]

தேசியம் பயணிகள் பணியாளர் மொத்தம்
நேபாளம் 13 3 16
இந்தியா 4 0 4
செருமனி 2 0 2
மொத்தம் 19 3 22

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nepal Tara Air Plane Crash LIVE Updates: No survivors found at Tara Air plane crash site". The Times of India (in ஆங்கிலம்). 31 May 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2022-05-30 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Twin Otter in Nepal im Himalaya abgestürzt". aeroTELEGRAPH (in ஜெர்மன்). 29 May 2022. 31 May 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 30 May 2022 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Search for missing Tara Air plane to resume today after bad weather, poor light affects operations". The Kathmandu Post. 30 May 2022. 31 May 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 31 May 2022 அன்று பார்க்கப்பட்டது. The aircraft took off at 9:55am and lost contact with air control about 12 minutes later at 10:07am, according to the Civil Aviation Authority.
  4. "Nepal: Plane goes missing with 22 people on board, officials say". Sky News. 29 May 2022. https://news.sky.com/story/nepal-plane-goes-missing-with-22-people-on-board-officials-say-12623429. 
  5. Hradecky, Simon (29 May 2022). "Crash: Tara DHC6 near Jomsom on May 29th 2022, aircraft found collided with mountain". avherald.com. The Aviation Herald. 31 May 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 29 May 2022 அன்று பார்க்கப்பட்டது.
  6. "நேபாளம் 22 பயணிகளுடன் சென்ற விமானம் காணவில்லை". தினமணி. https://www.dinamani.com/world/2022/may/29/tara-air-flight-with-22-people-on-board-goes-missing-above-nepal-mountains-3852887.html. பார்த்த நாள்: 2 June 2022. 
  7. "Nepal plane crash: Officials recover black box from wreckage" (in en-GB). BBC News. 31 May 2022. https://www.bbc.com/news/world-asia-61642218. 
  8. "Last body recovered Tara Air plane crash site: Nepal Army" (in en). Press Trust of India. 31 May 2022. https://indianexpress.com/article/world/last-body-recovered-tara-air-plane-crash-site-nepal-army-7944937/. 
  9. "Four Of Mumbai Family Among 22 People Onboard Plane That Crashed In Nepal". NDTV. 29 May 2022. https://www.ndtv.com/india-news/nepal-plane-crash-four-of-mumbai-family-among-22-people-onboard-plane-that-crashed-in-nepal-3019767. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_ஏர்_விமானம்_197&oldid=3440091" இருந்து மீள்விக்கப்பட்டது