தான்தோன்றீஸ்வரர் கோவில் (உறையூர்)

ஆள்கூறுகள்: 10°22′N 78°51′E / 10.367°N 78.850°E / 10.367; 78.850
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தான்தோன்றீஸ்வரர் கோவில்
தான்தோன்றீஸ்வரர் கோவில் is located in தமிழ் நாடு
தான்தோன்றீஸ்வரர் கோவில்
தான்தோன்றீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவு:உறையூர்
ஆள்கூறுகள்:10°22′N 78°51′E / 10.367°N 78.850°E / 10.367; 78.850
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

தான்தோன்றீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளி நகரிலுள்ள உறையூர் என்ற ஊரில் அமைந்துள்ள சிவபெருமானை வழிபடும் ஒரு இந்து கோவிலாகும். இந்த கோவில் 9 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசர் இரண்டாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டது.

கி.மு 885 ஆம் ஆண்டு சோழா் கால கல்வெட்டுகள் இருந்தன. தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆறு கால பூசை மற்றும் சடங்குகள்  நடைபெறுகிறது. ஆண்டுக்கு மூன்று திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.  இந்த கோயில் பரம்பரை அறங்காவலர்களால் பராமரிக்கப்பட்டு  நிர்வாகிக்கப்படுகிறது.

சொல்லியல் மற்றும் விளக்கம்[தொகு]

தானே தோன்றியவர் என்பது பொருள்கொண்ட ”தான்தோன்றீ” என்ற சொல்லில் இருந்து, இக்கோயிலின் முக்கியக் கடவுளான சிவன் ”தான்தோன்றீஸ்வரர்” என அழைக்கப்படுகிறார். . இந்து புராணத்தின்படி, சோழ ராணி காந்திமதி சிவனின் தீவிர பக்தர் ஆவார். தாயுமானவர் சுவாமி கோவிலில் உள்ள சிவனை வழிபட்டாா். அவர் கர்ப்பமாக இருந்தபோது,  அவரால்  மலையில் அமைந்துள்ள கோயிலுக்கு ஏற முடியவில்லை. சிவபெருமான் ராணியின் பக்தியினால் மகிழ்ச்சி அடைந்து, லிங்க வடிவத்தில் இவ்விடத்தில் அவளுக்கு காட்சியளித்து சுகப்பிரசவத்திற்கு  ஆசிா்வதித்ததாக நம்பப்படுகிறது.[1]

கட்டிடக்கலை[தொகு]

கோயில் சன்னிதியின் தோற்றம்

இந்த கோவில் 9 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசர் இரண்டாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டது. இங்கு கி.மு 885 ஆம் ஆண்டைச் சேர்ந்த சோழா் கால கல்வெட்டுகள் உள்ளன. தற்போது இந்தக் கோயில் பரம்பரை அறங்காவலர்களால் பராமரிக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகிறது. 

தான்தோன்றீஸ்வரர் கோவில் வளாகத்தில் ஒரு வெளிப்பிரகாரமும் இரண்டு அடுக்கு விமானமும் உள்ளது.  கோயிலின் மையத்தில் அமைந்துள்ள   தான்தோன்றீஸ்வரர் (சிவன்) கருங்கல்லால் ஆன லிங்க வடிவத்தில் கிழக்கு முகமாக காட்சியளிக்கிறாா். முருகன், நந்தி மற்றும் நவக்கிரகம் ஆகியவை மண்டபத்தில் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பிற சிவன் கோயில்களில் உள்ளது போல  தான்தோன்றீஸ்வரர் சன்னதிக்கு அருகில் தட்சிணாமூர்த்தி, துர்கா மற்றும் சண்டிகேஸ்வரர்  ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. தான்தோன்றீஸ்வரர் துணைவியான குங்குமவள்ளி அவரது இரண்டு கரங்களில் அங்குசம் மற்றும் தாமரை ஆகியவற்றால் சித்தரிக்கப்பட்டு வடக்கு முகமாக காட்சியளிக்கிறாா். கோயில் கருங்கல்  சுவர்களால் சூழப்பட்டுள்ளது.[1]

வழிபாடு[தொகு]

அர்த்தநாரீசுவரர்

நாள்தோறும் மற்றும் திருவிழாக்காலங்களிலும் வழிபாடு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள  மற்ற சிவன் கோயில்களைப் போலவே, குருக்கள் சைவச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிராமண உட்பிாிவைச் சார்ந்தவர்கள். ஒரு நாளைக்கு ஆறு முறை வழிபாடுகள் செய்யப்படுகிறது; உஷத்காலம்: காலை 5.30 மணி, காலசந்தி: காலை 8:00 மணி, உச்சிக்காலம்: காலை 10 மணி, சாயரட்சை: மாலை 5 மணி, இரண்டாம் காலம்: இரவு 7:00 மணி. அா்த்த சாமம்: இரவு  8:00 மணி. தான்தோன்றீஸ்வரர் மற்றும் அம்மன் இருவருக்கும் அபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியம் மற்றும் தீப ஆராதனை ஆகியவை ஒவ்வொரு பூசையிலும் நடைபெறுகின்றன. சன்னதி முன்னால் மங்கள வாத்தியங்கள் முழங்க வேத முறைப்படி குருக்கள் வேதங்கள்  மூலம் வழிபட்டனா். சோமவாரம் மற்றும் சுக்ரவாரம்  போன்ற வாராந்திர சடங்குகளும்,  பிரதோசம், அமாவாசை, கிருத்திகை, பெளர்ணமி, சதுர்த்தி போன்ற மாத சடங்குகளும் நடைபெறுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 V., Ganapathy (4 November 2004). "Siva temple of yore". The Hindu இம் மூலத்தில் இருந்து 2005-02-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050208020318/http://www.hindu.com/fr/2004/11/05/stories/2004110503201000.htm. பார்த்த நாள்: 2013-09-09. 
  2. "Sri Kungumavalli Sametha Thanthondreeswarar temple". தினமலர். 2014. பார்க்கப்பட்ட நாள் 24 November 2015.

வெளியிணைப்புகள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]