தானியங்கிகளின் மூன்று விதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தானியங்கிகளின் மூன்று விதிகள் (Three Laws of Robotics), வழக்கமாக ‘மூன்று விதிகள்’ அல்லது அசிமாவின் விதிகள்’ என்றும் அழைக்கப்படும்) என்பவை ஐசக் அசிமாவ் எனும் அறிவியல் புனைகதை ஆசிரியரால் உருவாக்கப்பட்டதாகும். இந்த விதிகள் அசிமாவின் 1942 ஆம் ஆண்டில் "ரன் அரெளண்ட்” எனும் சிறுகதையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதற்கும் முன்னரே சில கதைகளில் மறைமுகமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"தானியங்கி கையேடு, 56 வது பதிப்பு, கி.மு. 2058" எனும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம் மூன்று விதிகள் கீழ்வருமாறு:

  • தானியங்கி மனிதர்களைக் காயப்படுத்தக் கூடாது. தானியங்கி இயங்காமல்/செயல்படாமல் இருப்பதால், மனிதர்கள் காயப்படுதலையும் அனுமதித்தல் கூடாது.
  • தானியங்கி மனிதர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளவேண்டும். அதேசமயம் அக்கீழ்படிதல் முதல் விதிக்கு முரண் இல்லாதவாறும் இருக்க வேண்டும்.
  • தானியங்கி தன்னுடைய சொந்த இருப்பின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதாவது முதல் இரு விதிகளுக்கும் முரண் இல்லாதபடி ஒரு தானியங்கி தன்னுடைய சொந்த இருப்பை பாதுகாத்துக் கொள்ளலாம்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Asimov, Isaac (1950). I, Robot.