உள்ளடக்கத்துக்குச் செல்

தாண்டிக்குளம் கந்தசுவாமி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாண்டிக்குளம் அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோவில் முகப்புத் தோற்றம்

8°46′43.32″N 80°29′7.44″E / 8.7787000°N 80.4854000°E / 8.7787000; 80.4854000 வவுனியா, தாண்டிக்குளம் அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோவில் யாழ் கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் வவுனியா கச்சேரியில் இருந்து வடக்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் தாண்டிக்குளம் புகையிரத (தொடருந்து) நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் ஆவணிமாதம் 2001 இல் நடைபெற்றது. ஆலயத்தில் தினமும் காலை மாலை என இரண்டு நேரப் பூசை நடைபெறுகின்றது. வருடாந்த அலங்கார உற்சவம் ஆவணிமாத கார்த்திகை நட்சத்திரத்தில் (ஒரு மாதத்தில் இரண்டு காத்திகை வந்தால் இரண்டாவது கார்த்திகை) தீர்த்தோற்சவம் உடனான பத்துநாட்கள் திருவிழா நடைபெறும். விசேட உற்சவங்களாக வருடாந்த உற்சவம், கந்தசஷ்டி, கேதாரகௌரி விரதம் ஆகியன இடம்பெறுகின்றன.

தாண்டிக்குளம் கந்தசுவாமி கோவிலின் முப்பரிமாணப்பார்வை