தாடாசனம்
Appearance
தாடாசனம் (Tadasana) என்பது ஓர் உடற்பயிற்சியாக நவீன யோகாவில் நிற்கும் நிலையில் செய்யும் யோகாசனமாகும்.[1][2] [3] இது பல நிற்கும் நிலை ஆசனங்களுக்கு அடிப்படையாகும்.
செய்முறை
[தொகு]- நேராக நின்றுகொண்டு நேராகப் பார்க்க வேண்டும்.
- கைகளை பக்கவாட்டில் உடலோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்
- இரு கால்களும் உடல் எடையைச் சமமாகத் தாங்க வேண்டும்.
- முழங்கால் சிப்பு மேல்நோக்கித் தூக்கியவாறு இருக்க வேண்டும்.
- தொடைகளும் பின்பக்கத் தசைகளும் இறுகியவாறு இருக்க வேண்டும்.
- மூச்சை உள்ளுக்கு இழுத்து கைகளை மேலே தூக்க வேண்டும்.
- கைகளை மேல்நோக்கி உயர்த்தும் நிலையில் கைகள் நேராகவும் விண்ணென்றும் இருக்க வேண்டும்.
- கால்களின் நிலையை மாற்றக்கூடாது.
- தோள்களுக்கு நேராகக் கைகளைக் கொண்டுவந்ததும் முழங்கைகளை மடக்கிக் கைகளைக் கூப்ப வேண்டும்.
- கூப்பிய நிலையில் அக்கைகளின் அடிப்புறம் நேராக (தரைக்கு இணையாக) இருக்க வேண்டும்.
- இந்நிலையில் மெதுவாக மூச்சை வெளியே விடவேண்டும்.
- மூச்சை மெல்ல உள்ளிழுத்தபடி, மெதுவாகக் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்த வேண்டும்.
- உள்ளங்கைகள் கூப்பிய நிலையில், ஒன்றோடொன்று ஒட்டியிருக்க வேண்டும்.
- கைகளை மேல்நோக்கி உயர்த்தியவாறு குதிகால்களை மேலே தூக்க வேண்டும்.
- அதே நிலையில் தலையை மேல் நோக்கி உயர்த்த வேண்டும்.
வெளியேறும் விதம்
[தொகு]- குதிகாலைக் கீழே இறக்க வேண்டும்.
- மூச்சை மெதுவாக வெளியேற்றியபடி கைகளைத் தளர்த்த வேண்டும்.
- கைகளைக் கீழே தொங்கப் போடலாம் அல்லது கூப்பிய நிலையிலேயே மார்பை ஒட்டியபடி வைக்கலாம்.
- மீண்டும் மூச்சை உள்ளே இழுத்தபடி கைகளையும் குதிகாலையும் தூக்கவும்.
- பின்னர் பழையநிலைக்கு வர வேண்டும்.
- விரல்களைக் கோத்தபடியும் கைகளை மேலே தூக்கலாம்.
பயன்கள்
[தொகு]நின்றநிலையில் செய்யும் ஆசனங்களுக்கு இது அடிப்படையான ஆசனமாகும். நின்றநிலையில் செய்யும் ஆசனங்களைச் செய்ய இந்த ஆசனப் பயிற்சி உதவுகிறது. இவ்வாசனத்தைச் செய்வதால் உடலின் எல்லாத் தசைகளும் புத்துணர்ச்சி பெறும்; கணுக்கால்கள், தொடைகள், அடி வயிறு, முதுகு ஆகியவை பலமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yoga Journal - Mountain Pose". பார்க்கப்பட்ட நாள் 11 April 2011.
- ↑ Saraswati, Swami Satyanand (1969). Asana Pranayama Mudra Bandha. Bihar: Yoga Publication Trust. p. 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86336-14-4.
- ↑ ஆசனங்களின் பலன்: தாடாசனம் (மலை போன்ற நிலை), தி இந்து (தமிழ்), மார்ச் 25, 2014