தாசரி நாகபூசண இராவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாசரி நாகபூசண இராவு
Dasari Nagabhushana Rao
இறப்பு(2008-04-28)ஏப்ரல் 28, 2008
வாழ்க்கைத்
துணை
நம்புரி பரிபூர்ணா

தாசரி நாகபூசண இராவு (Dasari Nagabhushana Rao) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இவர் இயங்கினார்.[1] 1992 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை ஆந்திரப் பிரதேச பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார்.[2] 1998 ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தேசிய செயலக உறுப்பினராகவும் பணியாற்றினார். மாணவராக இருந்தபோதே அகில இந்திய மாணவர் கூட்டமைப்பில் சேர்ந்ததன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1953 ஆம் ஆண்டு முதல் 1955 ஆம் ஆண்டு வரை அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தார்.[3]

2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதியன்று தனது 82 ஆவது வயதில்ல் தாசரி நாகபூசண இராவு இறந்தார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். ஏழை மற்றும் வயதான மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பான சந்திர இராசேசுவர ராவ் அறக்கட்டளையை நிறுவியதன் பின்னணியில் இவர் முக்கிய கருவியாக இருந்தார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் ஆந்திரப் பிரதேச மாநிலத் தலைமையகமான தாசரி நாகபூசண இராவு பவன் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dasari Nagabhushana Rao cremated". Dnaindia.com. 2008-04-29. பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.
  2. "Rediff on the NeT: TDP wins 5 Rajya Sabha seats".
  3. "Senior CPI leader passes away - Oneindia News". Oneindia.com. 2008-04-28. பார்க்கப்பட்ட நாள் 2021-06-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாசரி_நாகபூசண_இராவு&oldid=3787495" இலிருந்து மீள்விக்கப்பட்டது