தாக்கா விரைவு செயல் படைப்பிரிவு முகாம் தற்கொலைத் தாக்குதல் 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாக்கா விரைவு செயல் படைப்பிரிவு முகாம் தற்கொலைத் தாக்குதல் 2017
இடம்தாக்கா, வங்கதேசம்
தாக்குதலுக்கு
உள்ளானோர்
விரைவு செயல் படைப்பிரிவு இராணுவத்தினர்
ஆயுதம்தற்கொலைக் குண்டு
இறப்பு(கள்)1
காயமடைந்தோர்2
தாக்கியோர்இசுலாமிய அரசு

வங்கதேசத்தின் தலைநகர் தாக்காவில் அமைந்திருந்த விரைவு செயல் படைப்பிரிவுமுகாம் மீது 2017, மார்ச்சு 17 அன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.[1]

பின்புலம்[தொகு]

இத்தற்கொலைத் தாக்குதலுக்கு இசுலாமிய அரசு எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது[2]. வங்கதேசதில் தற்கொலைத் தாக்குதல்கள் அரிதானவை ஆகும்.[3]

தாக்குதல்[தொகு]

17 மார்ச்சு 2017 அன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:10 மணியளவில் தாக்குதல்தாரி விரைவு செயல் படைப்பிரிவு முகமில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த பகுதிக்கு வந்து குண்டை வெடிக்கச் செய்தார். இதல் தாக்குதல்தாரி கொல்லப்பட்டார் மேலும் இரு இராணுவ அதிகாரிகள் காயமடைந்தனர். காயமடைந்த இராணூவ அதிகாரிகள் இருவரும் தாக்கா இராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படனர். வங்கதேசத்தில் தாக்குதல் நடத்துவோம் என இஸ்லாமிய அரசு தீவிரவாதக் குழு அறிவித்த இரண்டு நாட்களுக்குள் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலுக்கு அடுத்த நாள் ஜமாத்துல் முஜாஹிதீன் வங்கதேசம் எனும் அமைப்பைச் சேர்ந்த இருவரை வங்கதேச தீவிரவாதத் தடுப்பு பிரிவினர் சிட்டகாங் நகரில் தேடுதல் வேட்டையின் போது கைது செய்தனர்[4][5][2].

மேற்கோள்கள்[தொகு]