தாக்கா தாக்குதல் 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாக்கா தாக்குதல் 2016
இடம்ஹோலி அர்டிசன் அடுமனை
நாள்1–2 ஜூலை 2016
21:20 – 08:30
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இஸ்லாமியர் அல்லாதோர் மற்றும் வெளிநாட்டவர்.[1][2][3][4]
தாக்குதல்
வகை
துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்பு மற்றும் பிணைக்கைதிகள்

தாக்கா தாக்குதல் 2016 என்பது 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் நாள் வங்காளதேசத்தின் தலைநகர் தாக்காவில் நடைபெற்ற தாக்குதலாகும்[5]. ஐந்து ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் "ஹோலி அர்டிசன் அடுமனை"யின் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலின் போது பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டவரை பிணையாகவும் பிடித்து வைத்திருந்தனர். அரசு காவல்படையின் எதிர்த் தாக்குதலில் இரு காவலர்கள் கொல்லப்பட்டனர்.[6][7] ஒட்டுமொத்த இத்தீவிரவாதத் தாக்குதல் நிகழ்வின் முடிவில் 29 பேர் கொல்லப்படனர். இதில் 18 வெளிநாட்டவரும், இரு உள் நாட்டவரும் ஐந்து ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளும் மற்றும் இரு அடுமனைப் பணியாளர்களும் ஆவர்.[8][9] வங்கதேசத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன[10].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bangladesh PM Hasina says 13 hostages rescued alive from Gulshan café".
  2. "'Those who could cite Quran were spared'". The Daily Star (2 July 2016).
  3. "20 hostages killed in 'Isil' attack on Dhaka restaurant popular with foreigners". The Daily Telegraph. பார்த்த நாள் 2 July 2016.
  4. Al-Mahmood, Syed Zain. "Bangladesh Hostage's Father Says Son Didn't Expect to Live". The Wall Street Journal. https://www.wsj.com/articles/bangladesh-hostages-father-says-son-didnt-expect-to-live-1467473132. பார்த்த நாள்: 3 July 2016. "[T]he militants, who Hasnat Karim said seemed to be in their early 20s, were hunting for foreigners and non-Muslims. 'They asked the hostages to recite verses from the Quran', he said. 'Those who could [recite], were treated well, but those who couldn't were separated...'" 
  5. "Gunmen take hostages in Bangladeshi capital Dhaka" (en-GB). BBC News (1 July 2016).
  6. "Gunmen take at least 20 hostages in Dhaka diplomatic quarter, Bangladesh – reports". Russia Today. பார்த்த நாள் 1 July 2016.
  7. "Hostages taken in attack on restaurant in Bangladesh capital; witness says gunmen shouted 'Allahu Akbar'". Fox News. பார்த்த நாள் 1 July 2016.
  8. "Hostage crisis leaves 28 dead in Bangladesh diplomatic zone". The Washington Post (2 July 2016). மூல முகவரியிலிருந்து 15 டிசம்பர் 2018 அன்று பரணிடப்பட்டது.
  9. Marszal, Andrew (2 July 2016). "20 foreigners killed in 'Isil' attack on Dhaka restaurant". The Telegraph.
  10. "Bangladesh's 7/16". The Daily Star (Dhaka, Bangladesh). 3 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாக்கா_தாக்குதல்_2016&oldid=3215756" இருந்து மீள்விக்கப்பட்டது