தாகின்-வெசுட் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாகின்-வெசுட் வினை ( Dakin–West reaction) என்பது ஓர் அமில நீரிலியையும் காரத்தையும், குறிப்பாக பிரிடின்பிரிடினைப் பயன்படுத்தி ஓர் அமினோ அமிலத்தை ஒரு கீட்டோ அமைடாக மாற்றக்கூடிய வேதி வினையைக் குறிக்கிறது[1][2][3][4][5]

என்றி திரிசுதேல் தாகின் (1880–1952) , இராண்டோல்பு வெசுட் (1890–1949) ஆகியோர் கண்டறிந்த காரணத்தால் வினைக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. கீட்டோ அமைடு விளைபொருளானது எப்போதும் நடுநிலைக் கலவையாகவே இருக்கும். எனினும், இவ்வினையின் சமச்சீரில்லா வேற்றுநிலையை 2016 இல் சிகீரினரும் அவருடன் பணியாளர்களும் கண்டறிந்து கூறினர்[6]

தாகின்-வெசுட் வினை
தாகின்-வெசுட் வினை

.

கரைப்பானாகவும், காரமாகவும் பிரிடின் செயல்படுவதால் மீள்கொதிப்பு நிபந்தனைகள் அவசியமாகின்றன[7] . இருந்தாலும், 4-டைமெத்திலமினோபிரிடின் வினையூக்கியைச் சேர்த்தால் அறை வெப்பநிலையிலேயே வினை நிகழ்கிறது[8].

சில அமிலங்களுடன் சேர்க்கும் பொழுது, வினையானது α-அமினோ தொகுதி இல்லாமலும் நிகழ்கிறது. தாகின் வினையிலிருந்து தாகின்–வெசுட் வினை வேறுபட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வினை வழிமுறை[தொகு]

அமிலம் 1 கலப்பு நீரிலியாக 3 அசைலேற்றமும், தூண்டுதலும் வினைவழிமுறையைத் தொடங்குகின்றன. ஆக்சாசொலோன் அல்லது அசுலாக்டோன் 4 உருவாக்கத்திற்காக அமைடு மின்னணு மிகு பொருளாக செயல்படுகிறது. அசுலாக்டோனின் புரோட்டான் நீக்கமும் அசைலேற்றமும் முக்கியமான கார்பன்–கார்பன் பிணைப்புக்கு வழியமைக்கின்றன. அடுத்தடுத்த வளையத் திறப்பும் கார்பாக்சில் நீக்கமும் இறுதியாக கீட்டோ அமைடு விளைபொருலைக் கொடுக்கின்றன[9][10]

தாகின்-வெசுட் வினையின் வினைவழிமுறை
தாகின்-வெசுட் வினையின் வினைவழிமுறை

.

கீட்டோன் தொகுப்பு பொதுமுறை[தொகு]

தாகின் –வெசுட் வினையின் மாறுபட்ட நவீன வினைகள் பல ஈனோலாகும் கார்பாக்சிலிக் அமிலங்களை அனுமதிக்கின்றன. அமினோ அமிலங்களை மட்டும் இவை அனுமதிக்கவில்லை. உதாரணமாக, β-அரைல் கார்பாக்சிலிக் அமிலங்கள் அவ்வமிலத்தின் அசிட்டிக் நீரிலி கரைசலுடன் என் –மெத்திலிமிடசோல் வினையூக்கியுடன் சேர்த்து சூடுபடுத்தும் பொழுது β-அரைல் கீட்டோன்களாக மாற்றப்படுகின்றன. கலத்தில் வலிமையன அசிட்டைலேற்ரும் முகவராக செயல்படக்கூடிய அசிட்டைலிமிடசோலியம் உற்பத்தியின் ஒரு பகுதியாக இவ்வினை நிகழ்கிறது[11]

திருத்தப்பட்ட தாகின்-வெசுட் வினை
திருத்தப்பட்ட தாகின்-வெசுட் வினை

.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dakin, Henry Drysdale; West, Randolph (1928). "A General Reaction of Amino Acids". The Journal of Biological Chemistry 78 (1): 91–104. http://www.jbc.org/content/78/1/91.citation. 
  2. Dakin, Henry Drysdale; West, Randolph (1928). "A General Reaction of Amino Acids. II". The Journal of Biological Chemistry 78 (3): 745–756. http://www.jbc.org/content/78/3/745.citation. 
  3. Dakin, Henry Drysdale; West, Randolph (1928). "Some Aromatic Derivatives of Substituted Acetylaminoacetones". The Journal of Biological Chemistry 78 (3): 757–764. http://www.jbc.org/content/78/3/757.citation. 
  4. Wiley, Richard H. (1947). "The Conversion of Amino Acids to Oxazoles". The Journal of Organic Chemistry 12 (1): 43–46. doi:10.1021/jo01165a006. 
  5. Buchanan, G. L. (1988). "The Dakin–West reaction". Chemical Society Reviews 17: 91–109. doi:10.1039/CS9881700091. 
  6. Wende, Raffael C.; Seitz, Alexander; Niedek, Dominik; Schuler, Sören M. M.; Hofmann, Christine; Becker, Jonathan; Schreiner, Peter R. (2016). "The Enantioselective Dakin-West Reaction". Angewandte Chemie International Edition 55: 2719–2723. doi:10.1002/anie.201509863. 
  7. Wiley, Richard H.; Borum, O. H. (1953). "3-Acetamido-2-butanone". Organic Syntheses 33: 1. doi:10.15227/orgsyn.033.0001. 
  8. Höfle, Gerhard; Steglich, Wolfgang; Vorbrüggen, Helmut (1978). "4-Dialkylaminopyridines as Highly Active Acylation Catalysts. [New synthetic method (25)]". Angewandte Chemie International Edition in English 17 (8): 569–583. doi:10.1002/anie.197805691. 
  9. Knorr, Rudolf; Huisgen, Rolf (1970). "Zum Mechanismus der Dakin-West-Reaktion, I Die Reaktion von N-Acyl-sek.-aminosäuren mit Acetanhydrid". Chemische Berichte 103 (8): 2598–2610. doi:10.1002/cber.19701030831. 
  10. Allinger, Norman L.; Wang, Grace L.; Dewhurst, Brian B. (1974). "Kinetic and mechanistic studies of the Dakin-West reaction". The Journal of Organic Chemistry 39 (12): 1730–1735. doi:10.1021/jo00925a029. 
  11. Tran, Khanh-Van; Bickar, David (2006). "Dakin−West Synthesis of β-Aryl Ketones". The Journal of Organic Chemistry 71 (17): 6640–6643. doi:10.1021/jo0607966. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாகின்-வெசுட்_வினை&oldid=2747845" இலிருந்து மீள்விக்கப்பட்டது