தஹ்மிமா அனம்
தஹ்மிமா அனாம் (வங்காள மொழி : তাহমিমা பிறப்பு 8 அக்டோபர் 1975) ஒரு வங்காள தேசத்தில் பிறந்த பெண் எழுத்தாளர் ஆவார். இவர் புதின ஆசிரியரும், கட்டுரையாளரும் ஆவார். 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட எ கோல்டன் ஏஜ் என்ற இவரது முதல் புதினம் 2008 ஆம் ஆண்டின் பொதுநலவாய எழுத்தாளர் பரிசுகளில் “சிறந்த முதல் புத்தகத்திற்கான” பரிசை வென்றது. எ கோல்டன் ஏஜ் புதினத்தின் தொடர்ச்சியாக 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த த குட் முஸ்லீம் என்ற புதினம் 2011 ஆம் ஆண்டின் மேன் ஆசிய இலக்கிய பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[1] இவர் அபுல் மன்சூர் அகமது என்பவரின் பேத்தியும், மஹ்பூஸ் அனமின் மகளும் ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]அனாம் 1975 ஆண்டு அக்டோபர் 8 அன்று டாக்காவில் மஹ்பூஸ் அனாம் மற்றும் ஷாஹீன் அனாம் ஆகியோருக்கு பிறந்தார். இவர் தனது 2 வயதில், பாரிஸ் சென்றார். இவரது பெற்றோர் இருவரும் யுனெஸ்கோவில் பணியாற்றினார்கள். அனாம் பாரிஸ், நியூயார்க் மற்றும் பாங்காக் ஆகிய இடங்களில் வளர்ந்தார். வங்காள விடுதலைப் போரின் கதையை தனது குடும்பத்தினரிடமிருந்து கற்றுக் கொண்டார்.[2][3]
கல்வி
[தொகு]அனாம் தனது 17 வயதில் அவர் மவுண்ட் ஹோலியோக் கல்லூரிக்கு உதவித்தொகை பெற்றார். அந்த கல்லூரியில் 1997 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார்.[4] 2005 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர், லண்டன் பல்கலைக்கழகத்தின் ராயல் ஹோலோவேயில் படைப்பு எழுத்தில் தனது முதுகலைப் பட்டத்தை நிறைவு செய்தார்.[5]
பணி
[தொகு]2007 ஆம் ஆண்டு மார்ச்சில், அனமின் முதல் புதினமான எ கோல்டன் ஏஜ் எனும் புத்தகம் ஜான் முர்ரே பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது. போரின் போது சுதந்திரப் போராளிகளாக இருந்த அவரது பெற்றோரால் ஈர்க்கப்பட்ட அவர் வங்காள தேச விடுதலைப் போரை மையமாக வைத்து புதினத்தை எழுதினார்.[6] அவர் தனது முதுகலை பட்டப்படிப்பின் போது வங்காளதேச விடுதலைப் போரைப் பற்றியும் ஆய்வு செய்தார். தனது ஆய்வக்காக அவர் இரண்டு ஆண்டுகள் வங்காளதேசத்தில் தங்கி நூற்றுக்கணக்கான போர் வீரர்களை பேட்டி கண்டார். தாரெக் மற்றும் கேத்தரின் மசூத்தின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப் படமான மாடிர் மொய்னா (த க்ளே பர்ட் ) தொகுப்பிலும் அவர் பணியாற்றினார். இத் திரைப்படம் வங்காள விடுதலைப் போரின் நிகழ்வுகளை பிரதிபலிக்கிறது.[7]
2011 ஆம் ஆண்டில் எ கோல்டன் ஏஜ் புதினத்தின் தொடர்ச்சியான தி குட் முஸ்லீம் என்ற புதினம் வெளியிடப்பட்டது. இது மேன் ஆசிய இலக்கிய பரிசுக்கு பட்டியலிடப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் ராணா பிளாசா கட்டிட சரிவை மைமயாக கொண்டு எழுதப்பட்ட அவரது சிறுகதையான "கார்மென்ட்ஸ்" வெளியிடப்பட்டது. இந்த சிறுகதை ஓ. ஹென்றி விருதை வென்றது.[8] மேலும் பிபிசி தேசிய சிறுகதை விருதுக்கு பட்டியலிடப்பட்டது.[9] அனாம் 2016 ஆம் ஆண்டில் தி மேன் புக்கர் சர்வதேச பரிசுக்கான நீதிபதியானார்.[10]
2016 ஆம் ஆண்டில் தி போன்ஸ் ஆஃப் கிரேஸ் என்ற அவரது புதினம் ஹார்பர் காலின்ஸ் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டது.[11] அடுத்த ஆண்டில் அவர் இலக்கியத்திற்கான ராயல் சமூகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அனாம் தி நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன் மற்றும் நியூ ஸ்டேட்ஸ்மேன் என்பவற்றில் எழுதியுள்ளார். அனாம் தனது கட்டுரைகளில் வங்காளதேசம் மற்றும் அதன் வளர்ந்து வரும் பிரச்சினைகள் பற்றி எழுதியுள்ளார்.[12]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]அனமின் முதல் கணவர் வங்காளதேச சந்தைப்படுத்தல் நிர்வாகியாவார். 2010 ஆம் ஆண்டில் அனாம் அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ரோலண்ட் ஓ. லாம் என்பவரை மணந்தார். அவரை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சந்தித்தார். இந்த தம்பதியினருக்கு ரூமி என்ற மகன் உள்ளார்.[13] அனாம் கடந்த பத்தாண்டுகளாக லண்டனின் கில்பர்னில் வசிக்கின்றார்.
- ↑ "Welcome bbpower100.com - Justhost.com". bbpower100.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
- ↑ "culturebase.net | The international artist database | Mahfuz Anam". web.archive.org. 2007-02-03. Archived from the original on 2007-02-03. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ ""A Daughter of Bangladeshi Revolutionaries Makes Sense of Life After War". The New Yorker".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Tahmima Anam: 'I have a complicated relationship with Bangladesh".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Tahmima Anam lifts the veil on Bangladesh's ugly truths".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "The Bookseller". www.thebookseller.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
- ↑ The outsider". Prothom Alo. 13 January 2007.
- ↑ "The O. Henry Prize Stories". www.randomhouse.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
- ↑ "BBC Radio 4 - BBC National Short Story Award, BBC National Short Story Award 2016, Garments". BBC (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
- ↑ "The Man Booker International Prize 2016: Judging Panel Announced | The Booker Prizes". thebookerprizes.com. Archived from the original on 2019-11-20. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
- ↑ "TAHMIMA ANAM COMPLETES her 'BANGLADESH TRILOGY' WITH the BONES OF GRACE". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
- ↑ ""Bangladesh: Give me back my country"".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Bookslut | An Interview with Tahmima Anam". www.bookslut.com. Archived from the original on 2020-01-15. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.