தவழும் கோழிகள்
தவழும் கோழிகள் (Creeper chickens) என்பன அசாதாரணமாகக் குறுகிய கால்களைக் கொண்ட கோழியினமாகும். இதனால் இவற்றால் தரையில் சில சென்டிமீட்டர் தூரம் மட்டுமே நகர முடியும். காண்டிரோடிஸ்ட்ரோபி எனப்படும் இந்நிலையானது மந்தமான ஆபத்தான அல்லீல், சி.பி. யால் ஏற்படுகிறது.[1]:{{{3}}} பல கோழியினங்களில் சிறப்பியல்புகள் காணப்படுகின்றன. அவை, ஜப்பானின் சாபோ மற்றும் ஜிட்டோக்கு இனங்கள், பிரான்சின் கோர்ட்-பட்டேஸ், ஜெர்மனியின் க்ரூப்பர், டென்மார்க்கின் லுட்டேஹான்ஸ் மற்றும் ஸ்காட்ஸ் டம்பி.[2]:{{{3}}}[3]:{{{3}}}
தவழும் மரபணு
[தொகு]தவழும் மரபணு சிபி என்பது 1925ஆம் ஆண்டு கட்லர் என்பவரால் விவரிக்கப்பட்டது. மேலும் 1930ஆம் ஆண்டில் லேண்டவுர் மற்றும் டன் ஆகியோரால் உறுதிப்படுத்தப்பட்டது. சிபி எனும் அடையாளம் 1933ஆம் ஆண்டில் ஹட் அவர்களால் ஒதுக்கப்பட்டது. 1942ல் சாபோவில் உள்ளது லாண்டராலும் 1972ல் ஜிட்டோகோகோவில் சிபுயாவாலும் உறுதிப்படுத்தப்படது.[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ F.B. Hutt (1949). Genetics of the Fowl. New York: McGraw-Hill Book Company.
- ↑ Janet Vorwald Dohner (2001). The Encyclopedia of Historic and Endangered Livestock and Poultry Breeds. New Haven, Connecticut; London: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0300088809.
- ↑ Scots Dumpy / United Kingdom (Chicken). Domestic Animal Diversity Information System of the Food and Agriculture Organization of the United Nations. Accessed December 2019.