தர்சிபாய் கான்புரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்சிபாய் கான்புரா
Dharshibhai Khanpura
குசராத்து சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2012–2017
முன்னையவர்பாபுபாய் தேசாய்
பின்னவர்கிர்த்திசிங் வகேலா
தொகுதிகாங்கிரேச்சு சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2002–2007
முன்னையவர்மாகன் சிங் வகேலா
பின்னவர்பாபுபாய் தேசாய்
தொகுதிகாங்கிரேச்சு சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1990–1998
முன்னையவர்செயந்திலால் வீர்சந்த் சா
பின்னவர்மாகன் சிங் வகேலா
தொகுதிகாங்கிரேச்சு சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு3 நவம்பர் 2020
யு. என். மேத்தா மருத்துவமனை, அகமதாபாது, குசராத்து
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
சனதா தளம் (குசராத்து)

தர்சிபாய் கான்புரா (Dharshibhai Khanpura) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தர்சிபாய் லகாபாய் கான்புரா என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த இவர் காங்கிரேச்சு தொகுதியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு குசராத்து சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தர்சிபாய் குசராத்து மாநிலம் பனசுகந்தா மாவட்டத்தில் உள்ள வாதா கிராமத்தைச் சேர்ந்தவராவார்.{</ref> இவர் 4 ஆம் வகுப்பு வரை படித்தார் [1]

தர்சிபாய் கான்புரா நான்கு முறை காங்கிரேச்சு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி குசராத் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் சனதா தளம் கட்சியின் உறுப்பினராகவும், 1995, 2002 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளீல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகவும் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 600 வாக்குகள் மட்டுமே முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.[2]

தர்சிபாய் கான்புரா கோவிட்-19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள ஐ.நா மேத்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று தனது 80 ஆவது வயதில் இறந்தார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Khanpura Dharshibhai Lakhabhai (Indian National Congress (INC)): Constituency- KANKREJ (BANASKANTHA)". பார்க்கப்பட்ட நாள் 2020-11-04.
  2. "ગુજરાત કોંગ્રેસના કયા દિગ્ગજ નેતાનું કોરોનાથી થયું અવસાન ? પ્રધાનમંત્રી મોદીએ શું કર્યું ટ્વિટ, જાણો વિગતે". ABP Asmita (in குஜராத்தி). 2020-11-03. Archived from the original on 2020-11-03. பார்க்கப்பட்ட நாள் 2020-11-04.
  3. Nirav (2020-11-03). "કાંકરેજના પુર્વ ધારાસભ્ય ધારસીભાઈ ખાનપુરાનુ આકસ્મીક અવશાન, પીએમ મોદીએ પણ દુખ વ્યક્ત કર્યુ". Garvi Takat (in குஜராத்தி). Archived from the original on 2020-11-03. பார்க்கப்பட்ட நாள் 2020-11-04.
  4. "કોરોનાથી નિધન:કાંકરેજના પૂર્વ ધારાસભ્ય અને પીઢ કોંગ્રેસી નેતા ધારસી ખાનપુરાનું કોરોનાના કારણે નિધન, મોદી અને રૂપાણીએ શ્રદ્ધાંજલિ આપી". Divya Bhaskar (in குஜராத்தி). 2020-11-03. பார்க்கப்பட்ட நாள் 2020-11-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்சிபாய்_கான்புரா&oldid=3831429" இலிருந்து மீள்விக்கப்பட்டது