உள்ளடக்கத்துக்குச் செல்

தரை ஓடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தரைப் பரப்புகளை நீண்ட காலம் உழைக்கத்தக்கவையாக ஆக்குவதற்குப் பல வகை ஓடுகளைப் பதிக்கிறார்கள். இவற்றை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். மெருகு ஓடுகள் (Vitrified Tiles) வனை ஓடுகள் (Ceramic Tiles)

மெருகு ஓடுகள் கண்ணாடி போன்ற பளபளப்பைக் கொண்டவை. களிமண், சிலிகா, குவார்ட்சு,ஃபெல்ட்ஸ்பார் ஆகிய பொருட்களைக் கொண்ட கலவையைப் பயன்படுத்தி மெருகு ஓடுகள் தயாரிக்கப்படுகின்றன.

இத்தகைய கலவைப் பொருட்கள் காரணமாக, அதிக வெப்பத்தில் உருக்கப்படும்போது, கண்ணாடி போன்ற படிமம் உருவாகிறது. இது மெருகு ஓடுகளின் அனைத்துப் பகுதிகளிலும் இடம் பிடிக்கிறது. மெருகு ஓடுகளில் நுண்துளைகள் இருப்பதில்லை. தீயினால் சுடப்படுவதற்கு முன்பாகவே, கலவையில் வண்ணச் சாயங்களைச் சேர்க்கிறார்கள். இதன் காரணமாக இந்த ஓடுகளின் நிறம் எல்லாப் பகுதிகளிலும் ஒரே சீராக அமைந்திருக்கும். எனவே இந்த வகை ஓடுகளின் ஒரு பகுதி சிதைவடைய நேரிட்டாலும் வண்ணம் மாறுவது கிடையாது.

வனை ஓடுகள் களிமண்ணை முக்கிய மூலப் பொருளாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. அச்சில் இடப்பட்டு, தேவைப்படும் வடிவில் ஓடுகளைச் சுட்டு எடுக்கிறார்கள். அதற்குப் பிறகே இந்த ஓடுகளுக்கு மேற்பூச்சுக் கொடுக்கிறார்கள்.

வனை ஓடுகளில் சிதைவு ஏற்பட்டால் மேற்பூச்சு இழக்கப்படும். நிறம் மாறும். சிதைவுற்ற பகுதி தனியாகத் தோற்றம் அளிக்கும். இது ஒரு குறையாகக் கருதப்படும்.

இதைத் தவிர்ப்பதற்காகவே வனை ஓடுகளைக் காட்டிலும் மெருகு ஓடுகளை விரும்புகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரை_ஓடுகள்&oldid=2222072" இலிருந்து மீள்விக்கப்பட்டது