தரிப்பள்ளி இராமையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தரிப்பள்ளி இராமையா
தரிப்பள்ளி இராமையாவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் ஸ்ரீ பிரணாப் முகர்ஜி பதமஸ்ரீ விருது வழங்கியபோது, குடியரசுத் தலைவர் மாளிகை, புது தில்லை, மார்ச்சு 30, 2017.
பிறப்பு1937
ரெட்டிபள்ளி, கம்மம், தெலுங்கானா
தேசியம்இந்தியன்
பணிமரங்கள் பாதுகாப்பு
அறியப்படுவதுமரங்கள் பாதுகாவலர்

தரிப்பள்ளி இராமையா (Daripalli Ramaiah) என்பவர் மரங்கள் இராமையா என அழைக்கப்படும் சமூக சேவகர் ஆவார். இவர் 1937 ஆம் ஆண்டு பிறந்தார். மரங்களை நட்டு வனப்பகுதியினை விரிவுபடுத்துவதில் செய்த மதிப்புமிக்க சேவையினை பாராட்டும்விதமாக, 2017ஆம் ஆண்டு இந்திய அரசினால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1] இவர் இப்பகுதி மக்கள் 'சேட்லா ராமையா' (மரம் இராமையா) என்று அழைக்கின்றனர். வனப்பரப்பினை அதிகரிக்கும் நோக்கத்தில் கம்மம் மாவட்டத்தில் கோடிக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்துள்ளார். இம்மரங்கள், நிழல் தரும் மரங்கள், பழம் தரும் மரங்கள், பயோடீசல் தாவரம் என எதிர்கால தலைமுறையினருக்குப் பயனளிக்கும் பல்வேறு வகையின.[2]

இளம்வயது வாழ்க்கை[தொகு]

இராமையா ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில் (இப்போது தெலுங்கானாவில்) உள்ள ரெட்டிபள்ளி கிராமத்தில் பிறந்தார்.[3] 10ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பு பயின்றுள்ளார்.[4]

வாழ்க்கை[தொகு]

சமூக காடுகள் பரப்புரை[தொகு]

சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக சமூக காடு வளர்ப்பில் இடைவிடாது செயல்பட்டுவருகிறார். ஆனால் இப்பணியினை எப்பொழுது துவங்கினார் என்பது தெரியாது என்று கூறும் இராமையா, தன்னுடைய இளமைப்பருவத்தின் போது தனது தாயார் அடுத்த தலைமுறைகளுக்காகக் காய்கறி விதைகளைத் தயார் செய்து சேமித்ததை நினைவு கூர்ந்து தன் பிரச்சார பயணம் தொடர்ந்ததாக கூறுகிறார். இவர் சிறுவயதிலிருந்தே, சந்தன மரம், அல்பீசியா சமன், ஃபிகஸ் ரிலிகியோசா, ஏகிள் மார்மெலோஸ், நியோலமர்கியா கடம்பா போன்ற பூர்வீக மரங்களின் விதைகளைச் சேகரித்து வருகிறார். மனித நல்வாழ்வுக்குத் தீர்வாக விதைகள்தான் அமையும் என இராமையா நம்புகிறார். "பூமியை தங்கள் வீடாக அனைத்து உயிரினங்களும் கருதுகின்றன, இதில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது மனித இனம். ஏனெனில் மனிதர்களுக்குப் புத்தி இருக்கிறது, சிந்தித்துச் செயலாற்ற முடியும். இயற்கையானது தனது சிறந்த ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளது. எனவே. இயற்கையைச் சார்ந்தே நமக்கு கடமைகள் இருக்கின்றன. இயற்கையைப் பாதுகாக்கவும்; கடவுளால் படைக்கப்பட்ட அனைத்தும் மேன்மை அடைய, பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்"-தரிப்பள்ளி இராமையா[5]

இராமையா தன்னுடைய 3 ஏக்கர் நிலத்தினை விற்று மரக்கன்றுகளையும், விதைகளையும் வாங்கி மரங்களை வளர்த்து வனப்பரப்பினை அதிகரிக்கும் சேவையினை தொடர்ந்து வருகிறார்.

சரித்திர புத்தகம்[தொகு]

விதை முதல் பத்மஸ்ரீ வரை - வன உயிர் பயணம்-தெலுங்கில் நரேசு ஜில்லா.

இந்த புத்தகம் இராமையாவின் இளமைக்கால வாழ்க்கையிலிருந்து பத்மஸ்ரீ விருது பெற்றது வரையிலான அவருடைய வாழ்க்கையினையும், கோட்பாடுகளையும் விவரிக்கின்றது.

தனித்துவம்[தொகு]

இராமையா "மரம் ஒன்றை நட்டு உயிர் ஒன்றைக் காப்பாற்றுங்கள்" என்று பரப்புரை ஆற்றுவதைவிடச் செயலாற்றுவதையே விரும்பினார். விதைகள் நிறைந்த பொட்டலங்கள் மற்றும் மரக்கன்றுகளுடன் இவர் பல கிலோமீட்டர் தூரம் தன்னுடைய மிதிவண்டியில் பயணித்து சுற்றுச்சூழலைப் பேணிக்காக்க மரம் நடுவதை உள்ளூர் மக்கள் அனைவரும் நன்கு அறிவர். நமது சுற்றுச்சூழலைக் காப்பாற்ற மரங்களை நடவு செய்வதன் அவசியத்தை அவர் உண்மையிலேயே உணர்ந்த இவர், தான் கடந்து செல்லும் ஒவ்வொரு தரிசு நிலத்திலும் மரக்கன்றுகளை நடவு செய்து சோலையாக மாற்றியுள்ளார். சில நேரங்களில் அவர் தனது மனைவி மற்றும் உள்ளூர் பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகளுடன் இச்செயலினை நிறைவேற்றியுள்ளார். முறையான பள்ளிக் கல்வியினை இராமையா கற்கவில்லை என்றாலும், தனது முயற்சியினால் மரங்கள் பற்றிய ஏராளமான புத்தகங்களையும், மரங்களை நடும் செயல்முறை குறித்த புத்தகங்களையும் படித்திருக்கிறார். இவர் நடமாடும் தாவர கலைக்களஞ்சியமாகக் கருதப்படுகிறார்.

கெளரவம் மற்றும் விருதுகள்[தொகு]

ஆந்திர அரசு அவரது அயராது தன்னலமற்ற உழைப்பினைப் போற்றி சிறப்பு அங்கீகாரம் அளித்தது. தெலுங்கானா உருவான பின்னர், முதலமைச்சர் கல்வகுந்த்லா சந்திரசேகர் ராவின் முக்கிய திட்டங்களான தெலுங்கானா கு ஹரிதா ஹராம் (பசுமை அரண்) திட்டத்தின்கீழ் தொடர்ந்து ஆதரவைப் பெற்றார். ஹரிதா ஹராம் திட்டத்தின் நோக்கம் மாநிலத்தின் மொத்த புவியியல் பரப்பளவில் தற்போதுள்ள 24% பசுமை வளத்தினை 33% அதிகரிப்பதாகும்.[6]

வருடம் விருது
1995 சேவை விருது
2005 வன நண்பன்[2]
2015 தேசிய அளவிலான கண்டுபிடிப்பு, மரபுசார் அறிவு விருது
2017 பத்மஸ்ரீ[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Correspondent, Special. "Padma awards for five from Telangana; Three from AP also honoured" (in en). The Hindu. http://www.thehindu.com/news/cities/Hyderabad/Padma-awards-for-five-from-Telangana-Three-from-AP-also-honoured/article17095001.ece. 
  2. 2.0 2.1 Sridhar, P.. "Khammam’s green warrior soldiers on" (in en). The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/khammams-green-warrior-soldiers-on/article6632031.ece. 
  3. http://www.thehindu.com/news/national/telangana/lesson-on-vanajeevi-in-school-likely/article19824786.ece
  4. https://www.hindustantimes.com/india-news/man-with-a-green-thumb-the-padma-awardee-who-planted-10-million-saplings/story-G2ogX99XWZPUqCcettnFMK.html
  5. "How many trees have you planted?". The Better India.
  6. /Harithaharam_Home.aspx "Haritaharam". {{cite web}}: Check |url= value (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரிப்பள்ளி_இராமையா&oldid=3033709" இலிருந்து மீள்விக்கப்பட்டது