உள்ளடக்கத்துக்குச் செல்

தயோ அனிசோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயோ அனிசோல்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(மெத்தில்சல்பேனைல்)பென்சீன்[1]
வேறு பெயர்கள்
தயோ அனிசோல் (தற்போது பரிந்துரைக்கப்படுவதில்லை[1])
மெத்தில்(பீனைல்)சல்பேன்
பீனைல் மெத்தில் சல்பைடு
மெத்தில் தயோபென்சீன்
இனங்காட்டிகள்
100-68-5
ChemSpider 7239
EC number 202-878-2
InChI
  • InChI=1S/C7H8S/c1-8-7-5-3-2-4-6-7/h2-6H,1H3
    Key: HNKJADCVZUBCPG-UHFFFAOYSA-N
  • InChI=1/C7H8S/c1-8-7-5-3-2-4-6-7/h2-6H,1H3
    Key: HNKJADCVZUBCPG-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7520
  • CSC1=CC=CC=C1
பண்புகள்
C7H8S
வாய்ப்பாட்டு எடை 124.20 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.0533 கி/செ.மீ3
உருகுநிலை −15 °C (5 °F; 258 K)
கொதிநிலை 193 °C (379 °F; 466 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயோ அனிசோல் (Thioanisole) என்பது CH3SC6H5. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. இதுவோர் எளிய ஆல்கைல்-அரைல் தயோ ஈதரும் ஆகும். பெயரிலிருந்தே இச்சேர்மம் ஒரு கந்தகம் ஒத்த வரிசை தயோ ஈதர் சேர்மம் என அறியமுடிகிறது. அனிசோலில் உள்ள ஆக்சிசன் மைய ஈதருக்குப் பதிலாக இங்கு கந்தக மையம் இடம்பெற்றுள்ளது.

தயோபீனாலை மெத்திலேற்றம் செய்து தயோ அனிசோல் தயாரிக்கலாம்.

வினைகள்

[தொகு]

ஆல்கைல் இலித்தியம் வினைப்பொருள்கள் தயோ அனிசோலின் மெத்தில் குழுவில் புரோட்டான் நீக்கம் செய்து வலிமையான மின்னணு கவரியான C6H5SCH2Li சேர்மத்தைக் கொடுக்கின்றன. அதிக எண்ணிக்கையில் அணைவுச் சங்கிலிகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்க இதை ஆல்கைலேற்றம் செய்யமுடியும். உறுதியாக விளையும் தயோ ஈதரை பல்வேறு வழிகளில் கையாளமுடியும் [2] .

ஓர் தனி ஆக்சிசன் அணுவைச் சேர்ப்பதன் வழியாக இதை ஆக்சிசனேற்றம் செய்யும்போது மெத்தில் பீனைல் சல்பாக்சைடு உருவாகிறது[3]. டைமெத்தில்டையாக்சிரேன் போன்ற ஆக்சிகரணிகளை தரம் பார்க்க இவ்வினை பயனுள்ளதாக உள்ளது [4] அடுத்தடுத்த ஆக்சிசனேற்றங்களால் சல்போன் உருவாகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 707. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-00648. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
  2. Bailey, Simon "Thioanisole" e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis, 2001, John Wiley & Sons. எஆசு:10.1002/047084289X.rt093
  3. Johnson, Carl R.; Keiser, Jeffrey E. (1966). "Methyl Phenyl Sulfoxide". Org. Syntheses 46: 78. doi:10.15227/orgsyn.046.0078. 
  4. Adam, Waldemar; Chan, Yuk Yee; Cremer, Dieter; Gauss, Juergen; Scheutzow, Dieter; Schindler, Michael (1987). "Spectral and chemical properties of dimethyldioxirane as determined by experiment and ab initio calculations". J. Org. Chem. 52 (13): 2800–2803. doi:10.1021/jo00389a029. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோ_அனிசோல்&oldid=2724871" இலிருந்து மீள்விக்கப்பட்டது