தமிழ் துணை எழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துணைக்கால் 18 மெய்எழுத்துக்களுடன் ஆ என்ற உயிரெழுத்து சேரும்போது தோன்றும் 18 உயிர்மெய் எழுத்துக்களுடன் துணைக்கால் இடம்பெறும். இத்துணை எழுத்து உயிர்மெய் எழுத்துக்களில் வலப்புறம் மட்டுமே சேரும். (எ .கா ) க் +ஆ = கா க் என்ற மெய்யெழுத்து உயிர்மெய் எழுத்தாக மாறும்போது புள்ளி நீங்கிய வடிவம் (க ) பெறுகிறது. ஆ என்ற உயிரெழுத்து உயிர்மெய் எழுத்தாக மாறும்போது துணைக்கால் வடிவம் (ா) பெறுகிறது கா முதல் னா வரையுள்ள 18 எழுத்துக்களும் இவ்வாறே தோன்றுகின்றன.

 க் +ஆ = கா  ங் +ஆ = கா

 ச் +ஆ = சா  ஞ் +ஆ = ஞா
 ட் +ஆ = டா  ண் +ஆ = ணா
 த் +ஆ = தா  ந் +ஆ = நா
 ப்+ஆ = பா   ம் +ஆ = மா
 ய்+ஆ = யா  ர் +ஆ = ரா
 ல்+ஆ = லா  வ் +ஆ = வா
 ழ் +ஆ = ழா  ள் +ஆ = ளா
 ற் +ஆ = றா  ன் +ஆ = னா

பார்வை நுால்கள் நற்றமிழ் இலக்கணம்,டாக்டர் கோ. பரமசிவம், கவிக்குயில் பிரிண்டர்ஸ்,சென்னை,1975.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_துணை_எழுத்து&oldid=2723592" இருந்து மீள்விக்கப்பட்டது