தமிழ் சினிமா உலகம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் சினிமா உலகம், தமிழ்த் திரைப்படங்கள் பேசும் படங்களாக வெளிவர ஆரம்பித்த 1931 ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படங்களின் விபரங்கள் அடங்கிய ஒரு ஆவண, தொகுப்பு நூலாகும். நூலின் ஆசிரியர் திருப்பூர் அகிலா விஜயகுமார். இதன் முதல் தொகுதி வெளிவந்துள்ளது. இரண்டாவது தொகுதிக்கான பணிகள் ஆசிரியரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. [1][2]

தொகுதி 1[தொகு]

தமிழ் சினிமா உலகம் தொகுதி - 1 சென்னை 108, மணிவாசகர் பதிப்பகத்தால் 2019 மார்ச் மாதத்தில் முதல் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

528 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் 1931 ஆம் ஆண்டு தொடக்கம் 1940 ஆம் ஆண்டு வரை வெளியான இந்திய தமிழ்த் திரைப்படங்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 • படத்தின் பெயர்
 • வெளியான தேதி
 • படத்தின் நீளம்
 • தயாரிப்பு நிறுவனம்
 • தயாரிப்பாளர்
 • இயக்குநர்
 • கதை, வசன ஆசிரியர்கள்
 • நடிகர்கள்
 • நடிகைகள்
 • பாடலாசிரியர்கள்
 • இசையமைப்பாளர்கள்

ஆகிய விபரங்கள் நூலில் உள்ளன.

அத்துடன் படத்தில் இடம்பெற்ற பாடல்களின் முதலடி, ராகம், தாளம், பாடியவர்/நடித்தவர் பெயர் ஆகியவை பட்டியலிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

பிற அம்சங்கள்

படங்கள் பற்றிய விபரங்களோடு கட்டுரைகள், மேலதிகத் தகவல்கள் ஆகியனவும் நூலில் அடங்கியுள்ளன. பேசும் படங்கள் வரத் தொடங்கிய காலத்தில் காட்சி படமாக்கும் போதே நடிகர்கள் வசனம் பேச வேண்டும், பாடல்கள் பாடவேண்டும். அது அப்படியே ஒலிப்பதிவாகும். ஆகவே படம் பார்க்கும்போது மட்டுமே பாடல்களைக் கேட்க முடியும். ஆனால் சில இசைத்தட்டு நிறுவனங்கள் பாடகர்களை மீண்டும் பாடவைத்து ஒலிப்பதிவு செய்து இசைத்தட்டுகளாக வெளியிட்டன. அவ்வாறு வெளியான இசைத்தட்டுகள் பற்றிய விபரங்கள் தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

சில திரைப்படங்கள் ஒரே தலைப்பில் வெவ்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு வெளிவந்தன. அவ்வாறு ஒரே பெயரில் வெளியான வெவ்வேறு படங்கள் பற்றிய விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே போன்று ஒரே கதையை வெவ்வேறு நிறுவனங்கள் ஒரே பெயரில் அல்லது வேறு பெயர்களில் தயாரித்து வெளியிட்டன. அவற்றின் விபரமும் நூலில் உள்ளது.

அக்காலத்தில் சங்கத் தமிழ் நூல்கள், இதிகாசங்கள், புராணங்கள் என்பவற்றிலிருந்து கதைகள் எடுக்கப்பட்டு படமாக்கப்பட்டன. அவ்வாறு இராமாயணம், மகாபாரதம், புராணங்கள், பாகவதம், பக்த விஜயம், ராஜா-ராணி, பரம்பரைக்கதைகள், புதினங்கள் என்ற தலைப்புகளின் கீழ் வெளியான திரைப்படங்கள் வகைப்படி பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Man on a mission to salvage 1930s Tamil songs" (ஆங்கிலம்). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (15 நவம்பர் 2019). மூல முகவரியிலிருந்து 15 நவம்பர் 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 15 நவம்பர் 2019.
 2. ஜனனி சம்பத் (17 நவம்பர் 2019). "Music buff documents early years of Tamil cinema, presents rare glimpses" (ஆங்கிலம்). thefederal.com. மூல முகவரியிலிருந்து 18 நவம்பர் 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 நவம்பர் 2019.

உசாத்துணை[தொகு]

 • தமிழ் சினிமா உலகம் (தொகுதி 1) - வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31 ச்ரிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600108.