தமிழ்மொழி இராஜதத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ்மொழி இராஜாதித்தன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்மொழி இராஜதத்தன் (Tamilmozhi Rajadattan) ஒரு இந்திய  அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2001 சட்டமன்றத் தேர்தலில் மேல்மலையனூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 2006 சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் இருந்து அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் இம்முறை தோல்வியடைந்தார்.[2]

தொடக்ககால வாழ்க்கையும் பின்னணியும்[தொகு]

அவர் 1960ஆம் ஆண்டில் மே 3 ஆம் நாள் பொன்னூரில் பிறந்தார்.[3] அவருடைய கணவர் பெயர் இராஜதத்தன்.[4]

அரசியல் பின்னணி[தொகு]

மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கவுன்சிலர் பதவியை வகித்து உள்ளார். அவர் அதிமுகவின் செயற்குழு உறுப்பினராகவும், விழுப்புரம் வடக்கு மாவட்ட மகளிர் பிரிவின் செயலாளராகவும் இருந்துள்ளார் .[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "Tamil Nadu News : DPA wins nine seats in Villupuram district". The Hindu. 2006-05-13. Archived from the original on 2008-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-06-22.
  3. 3.0 3.1 "Tamilnadu Election 2006, AIADMK Candidate,R.Tamilmozhi Rajadhathan, Melmalayanur Constituency". TamilnaduMLAs.com. Archived from the original on 2009-07-08. பார்க்கப்பட்ட நாள் 2012-06-22.
  4. "Making democracy meaningful, Know our Representative & Candidate". Empowering India. பார்க்கப்பட்ட நாள் 2012-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்மொழி_இராஜதத்தன்&oldid=3943816" இலிருந்து மீள்விக்கப்பட்டது