தமிழ்ப் பருவப்பெயர்கள்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்மொழிக்குள்ள பல சிறப்புகளில் சொற்சிறப்பும் ஒன்று. தமிழ்மொழியிலுள்ள பருவப்பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும். இச்சொற்களின் சிறப்பு, உருவத்தையும் பருவத்தையும் காட்டி நிற்பதாகும்.[1]
ஆண்களின் பருவப்பெயர்கள்
[தொகு]- 1 - 12 வயது ஆண் - பாலகன்
- 12 - 24 வயது ஆண் - விடலை.
- 24 - 36 வயது ஆண் - காளை.
- 36 - 48 வயது ஆண் - மீளி.
- 48 - 60 வயது ஆண் - மறவோன்.
- 60 - 72 ஆண் - திறவோன்.
- 72 வயதுக்கு மேல் ஆண் - முதுமகன்.
மற்றொரு பட்டியல்
[தொகு]- பிள்ளை - குழந்தைப்பருவம்
- சிறுவன் - பாலப்பருவம்
- பையன் - பள்ளிப்பருவம்
- காளை - காதற்பருவம்
- தலைவன் - குடும்பப்பருவம்
- முதியோன் - தளர்ச்சிப்பருவம்
- கிழவன் - மூப்புப்பருவம்
பெண்களின் பருவப்பெயர்கள்
[தொகு]உலா வரும் தலைவனைப் பார்த்து காம வயப்பட்டு ஏழு வகையான பருவப் பெணகள் மயங்குவதாக உலா நூல் பாடல்கள் அமைவது மரபு. பெண் பருவம்
| வரிசை | பருவம் | அகவை | விளக்கம் [2] [3] |
|---|---|---|---|
| 1 | பேதை | 5 - 7 | உலகியலை அறியாத இளம்பருவம் |
| 2 | பெதும்பை | 8 - 11 | உலகியலை ஒருவாறு உணர்ந்தும் உணராமலும் இருக்கும் பருவம் |
| 3 | மங்கை | 12 - 13 | காம நுகர்ச்சிக்கு ஏற்புடைய பருவம் |
| 4 | மடந்தை | 14 - 19 | காம நுகர்ச்சியில் பயின்ற பருவம் |
| 5 | அரிவை | 20 - 25 | காம நுகர்ச்சியில் முதிர்ந்த பருவம் |
| 6 | தெரிவை | 26 - 31 | மகப்பேறு பெற்றிருக்கும் நிலையில் இருக்கும் பருவம் |
| 7 | பேரிளம்பெண் | 32 - 40 | காம துகர்ச்சி தளரும் நிலையில் உள்ள பருவம் |
பூவின் பருவங்கள்
[தொகு]- அரும்பு - அரும்பும்நிலை
- மொட்டு -மொக்குவிடும்நிலை
- முகை -முகிழ்க்கும் நிலை
- மலர் -பூநிலை
- அலர் -மலர்ந்த நிலை
- வீ -வாடும்நிலை
- செம்மல் -இறுதிநிலை
இலைகளின் பருவப்பெயர்கள்
[தொகு]- கொழுந்து -குழந்தைப்பருவம்
- தளிர் -இளமைப்பருவம்
- இலை -காதற்பருவம்
- பழுப்பு -முதுமைப்பருவம்
- சருகு -இறுதிப்பருவம்