தமிழ்நடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நடை என்பது தமிழ் பேசப்படும் முறைமை. இதனை இயல் தமிழ் என்கிறோம். தொல்காப்பியத்தில் உள்ள கிளவியாக்கம் இதனை விரிவாகக் குறிப்பிடுகிறது. ஆங்கிலத்தில் இதனை sequence of sentence என்று கூறுவர்.

இயல்பாக எழுவாய் + பயனிலை, எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்னும் வரிசையில் அமையும். இது உரைநடையில் பின்பற்றப்படும் நெறி. பொருளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த வரிசை மாறி அமையினும் பொருளமைதி கெடுவதில்லை. அவன் வந்தான் என்பதை வந்தான் அவன் என்று சொன்னாலும் பொருள் மாறுபடாது.

'கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால், [1] என்னும் பாடல் பகுதியில் செய்தி முதன்மை கருதிப் (தோன்றா எழுவாய்) + பயனிலை + செயப்படுபொருள் + மூன்றாம் வேற்றுமைக் கருவிப்பொருள் என்னும் பாங்கில் தமிழ்நடை அமைந்திருத்தலைக் காணமுடிகிறது.

பாகுபாடுகள்[தொகு]

தமிழ்நடையில் உரைநடை, பாட்டுநடை என்பன பெரும் பாகுபாடுகள். தொல்காப்பியம் அக்காலத்தில் நிலவிவந்த மேலும் சில மொழிநடை நிலப் பாகுபாடுகளைக் காட்டுகிறது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. கம்பராமாயணம், சுந்தர காண்டம் திருவடி தொழுத படலம் 25
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நடை&oldid=3009565" இருந்து மீள்விக்கப்பட்டது