தமிழ்ச் சமூகத்தில் பெண் உரிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக் கட்டுரை தமிழ்ச் சமூகத்தில் பெண் உரிமை எவ்வாறு பேணப்படுகிறது என்பது பற்றியதாகும். தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் உரிமை கால அடிப்படையிலும், உள் பிரிவுகள் அடிப்படையிலும் பெரிதும் வேறுபடுகிறது.

பண்டைத் தமிழகத்தில் தமிழகத்தில் பெண் உரிமைகள் ஓரளவு பேணப்பட்டது என்றும், இடைகாலத்தில் அது பறிக்கப்பட்டு, தற்காலத்தில் மீண்டும் உறுதிசெய்யப்படுவதென்பது ஒரு பார்வை. இதை மறுத்து தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் தொடர்ந்து ஆண் ஆதிக்கதுக்கு உட்பட்டே இருந்தனர் என்றும் தற்காலத்திலேயே பெண் உரிமைகளில் பெரும் மாற்றம் நிகழுகின்றது என்பதும் இன்னோர் பார்வை.

பண்டைத் தமிழ் சமூகத்தில் பெண் உரிமை[தொகு]

சங்க இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க ஆக்கங்கள் பெண் புலவர்காள் செய்யப்பட்டவை. மொத்த புலவர்களுடன் ஒப்புடுகையில் பெண்களின் பங்கு மிகச் சிறிதே. எனினும் இது ஒரு பெண்கள் அக்கால சமூகத்தில் கல்வி, கலைகள் ஆகியவற்றில் மேன்மை பெறமுடியும் என்பதைக் காட்டுகிறது.

தமிழ்ச் சமூகத்தில் உள்ள பெண் தெய்வ வழிபாடும், பெண்கள் இழிவு நிலையில் வைத்திருக்கப்படவில்லை என்பதற்கு சான்றாக கொள்ளப்படுகிறது. பெரும்பான்மைச் சமயங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டை இறையை ஆணாக மட்டும் சித்தரிக்கையில், பெண் தெய்வ வழிபாடு ஒரு வேறுபட்ட சிந்தனையை சுட்டி நிக்கிறது.

இவற்றை விடுத்து பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் பெண் உரிமைகள் அவ்வளவு மேசமாக இருக்கவில்லை என்பதற்கு குறிஞ்சி, நெய்தல், முல்லை, பாலை திணைகளைச் சாந்த பெண்கள் பொருள் ஈட்டுவதில் முக்கிய பங்களித்தமை சுட்டப்படுகிறது. இந்த "நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்களிடம் ஆண் பெண் வாழ்வு சமத்துவமாகத்தான் இருந்ததென்று தெரிகின்றது. குறவர்கள் வேட்டையாடப் போவதுபோலக் குறத்திகள் குறிசொல்லுவதற்கும், மலைபடு திரவியங்களை விற்பதற்கு புறப்பட்டு விடுவார்கள். மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லுவார்கள். மீனவப் பெண்கள் மீன்களைக் கொண்டு போய் விற்பனை செய்து வேறு பண்டங்களை வாங்கி வருவார்கள். முல்லைநில ஆயார்கள் மாடு ஆடுகளைப் பாதுகாப்பார்கள்; ஆய்ச்சியர்கள் தயிர், பால், வெண்ணெய் நிலங்களுக்குக் கொண்டுபோய் விற்பனை செய்து வருவார்கள்."."[1]

உயர் சாதிகளிடம் பெண்ணைக் கூடிய கட்டுப்பாட்டுகுள் வைத்தினர். "பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடப்பதே நீதி - கற்பு - இல்லற தர்மம் ஏன்று கருதப்பட்டது."

தொல்காப்பியத்தில் பெண் அடிமைத்தனம்[தொகு]

அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப

"பயமும் நாணமும் அறியாமையும் முற்பட்டு நிற்றல் எப்பொழுதும் பெண்களுக்கு உரிய குணம்".[2]

முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை
எண்ணரும் பாசைறைப் பெண்ணொடு புணரார்

திருக்குறளில் பெண் அடிமைத்தனம்[தொகு]

பொத்மறையாக கருதப்படும் திருக்குறளிலும் திருவள்ளுவர் "பெண்கள் இல்லறத்தை நன்றாக நடத்துவதற்குத்தான் உரியவர்கள்; பொது வாழ்க்கையில் பங்குகொள்ள உரியவர்கள் அல்லர் என்றுதான் கருதுகிறார்."[3]

இல்லாள்கண் தாழ்ந்து இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும், மற்ற எஞ்ஞான்றும்
நல்ல்லார்க்கு நல்ல செயல்
நட்டார் குறைமுடியார், நன்றுஆற்றார் நல்நுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்

மேற்கோள்கள்[தொகு]

  1. சாமி சிதம்பரனார். (2000). தமிழர் வாழ்வும் வளர்ச்சியும். சென்னை: மணிவாசகர் பதிப்பகம். பக் 111.
  2. சாமி சிதம்பரனார். (2000). தமிழர் வாழ்வும் வளர்ச்சியும். சென்னை: மணிவாசகர் பதிப்பகம். பக் 112.
  3. சாமி சிதம்பரனார். (2000). தமிழர் வாழ்வும் வளர்ச்சியும். சென்னை: மணிவாசகர் பதிப்பகம். பக் 118.