உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு என்பது ஈழத்தமிழர் உரிமைகளுக்காக போராடுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாணவர் அமைப்பு ஆகும். தமிழகத்தின் பல கல்லூரிகளின் மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த அமைப்பை உருவாக்கி உள்ளார்கள். இந்த மாணவர் அமைப்பு மார்ச்சு 2013 எதிர்ப்புப் போராட்ட காலப் பகுதியில் உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்புக்கும் திமுக வின் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அவர்கள் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பை ஆதரிக்கவில்லை என்றும், இந்த அமைப்பு அரசியல் கட்சி சாராத அமைப்பாக செயல்படும் என்று கூறியுள்ளது.[1]

ஐ.நாவில் இந்தியா எந்தவித முன்னெடுப்புக்களையும் செய்யாததைத் தொடர்ந்து இவர்கள் "இந்தியாவிற்கு எதிரான காலவரையற்ற ஒத்துழையாமை இயக்கம்" ஒன்றைத் தொடங்கினார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழக கல்லூரி மாணவர்களை ஒன்றிணைத்து தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு உதயம்[தொடர்பிழந்த இணைப்பு]