தமிழில் மருத்துவ இலக்கியங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் மருத்துவ இலக்கியங்கள்[1] என்பது இர. வாசுதேவன் எழுதிய நூல் ஆகும்.

நூலாசிரியர்[தொகு]

இர. வாசுதேவன் காட்டுமன்னார்கோயிலில் பிறந்த சென்னையில் வாழும் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ் சித்த மருத்துக் கல்விப்புலம் சார்ந்த கல்வியாளர் ஆவார்.

பதிப்பு விவரங்கள்[தொகு]

பூங்கொடி பதிப்பகம், சென்னை இந்நூலினை வெளியிட்டுள்ளனர்.இந்நூலின் முதற் பதிப்பு 2006 இல் வந்தது. இந்நூலின் இரண்டாம் பதிப்பு 2013 இல் வெளிவந்தது. நூலின் பக்கங்கள் 420 ஆகும்.

நூலின் முகவுரைச் செய்திகள்[தொகு]

அணிந்துரை, கருத்துரை, என்னுரை, பதிப்புரை என்னும் அறிமுக உரைகளை இந்நூல் கொண்டுள்ளது. தொன்மையான தமிழ் மருத்துவத்தின் கால வரலாற்று அடிப்படையிலான ஆய்வே தமிழில் மருத்துவ இலக்கியங்கள் என்னும் இந்நூல் என்கிறார் நூலாசிரியர். இந்நூல் நூலாசிரியரின் முனைவர்ப் பட்ட ஆய்வின் நூல் வடிவம் ஆகும்.

உள்ளடக்கம்[தொகு]

இந்நூலில் தமிழ் மருத்துவ இலக்கியங்கள், தமிழ் மருத்துவத்தின் வரலாறு, தமிழில் மருத்துவ நூல்கள், தமிழ் மருத்துவம், சித்தர் நெறி, தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள், முடிவுரை ஆகிய இயல்களின் வாயிலாக தமிழில் வெளியான மருத்துவ இலக்கியங்களை ஆய்வு நோக்கில் வெளிக்கொணர்ந்துள்ளார் நூலாசிரியர் இர. வாசுதேவன்.

பின்னிணைப்புகள்[தொகு]

மருத்துவப் பூக்கள், சித்த மருத்துவம் – ஆயுர் வேதம் ஒப்பீடு, வேத நூல்களில் தாவரங்கள், தமிழ் மருத்துவம், வர்ம நூல்கள்,பஞ்சபூதத்தின் பரிமாணங்கள், சித்தர் சமாதி, கோயில் தாவரங்கள், அகத்தியர் குழம்பு, கற்பங்கள், நரம்பு முறிவினால் உண்டாகும் பக்க விளைவுகள்,படுவர்மங்களும் இளக்கும் காலமும், நோயுற்ற நாள் பலன், நோயுற்ற நாள் – நோயின் தன்மை, அமுத நிலை, சித்தர் சாதி, மரபு, சித்தர் குடும்பம், அறுபத்து நான்கு சித்துகள், ஐந்தெழுத்தும் உடல் சக்கரமும், தமிழ் மருத்துவச் சுவடிகள், பதிப்பு நூல்கள் ஆகிய தரவுகளைப் பின்னிணைப்பில் அளித்துள்ளார் ஆசிரியர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. இர. வாசுதேவன், 2006, தமிழில் மருத்துவ இலக்கியங்கள், சென்னை: பூங்கொடி பதிப்பகம்.S

வெளி இணைப்புகள்[தொகு]

தினமணி நாளிதழில் நூல் அறிமுகம்