தனி நபர் வருமானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனி நபர் வருமானம் என்பது தலா வருமானம் அல்லது நபர்வரி வருமானம் (GDP per head, Per capita income) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு பொருளாதாரக் கருவியாகும். உண்மையான தனி நபர் வருமானம் உயர்ந்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததாகக் கருதப்படும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியை மொத்த மக்கள் தொகையால் வகுக்கக் கிடைப்பதாகும். அதாவது;

தனி நபர் வருமானம் = மொத்த உள்நாட்டு உற்பத்தி/மொத்த மக்கள் தொகை

இது பொதுவாக ஒரு நாட்டினையும் மற்றொரு நாட்டினையும் ஒப்பிட்டுப் பார்க்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் மதிப்பை சர்வதேச நாணய மதிப்பில் அமெரிக்க டாலர் அல்லது யூரோ எனும் மதிப்பீட்டில் கணிக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனி_நபர்_வருமானம்&oldid=1467012" இலிருந்து மீள்விக்கப்பட்டது