தனித்தியங்கும் வாகனம்
Jump to navigation
Jump to search
தனித்தியங்கும் வாகனம் அல்லது தானே ஓடும் வாகனம் என்பது மனிதர்கள் வண்டியை ஓட்டாமல் தாமே தம்மை ஓட்டுகொள்ளும் திறன் கொண்ட வாகனங்கள் ஆகும். சூழலை உணர்ந்து வழியறிந்து பயணிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும். மனிதர்கள் போகும் இடத்தை இடலாம், ஆனால் எந்தவித மேலதிக மனித உழைப்பையும் செலுத்த வேண்டி இராது.
தனித்தியங்கும் வாகனங்கள் பற்றிய முதல்கட்ட ஆய்வுகளை ஐக்கிய அமெரிக்க படைத்துறை ஆய்வு நிறுவனம் டார்ப்பா முன்னெடுத்தது. தற்போது கூகிள் போன்ற நிறுவனங்கள் இவற்றை விருத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளன. மேலும் மேலும் திறங்கள் கொண்ட தனித்தியங்கும் வாகனங்கள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் நவேடா மாநிலத்தில் மனிதர்கள் ஓட்டுநர் அனுமதி பெறுவது போன்று இவையும் பெற்று, இவற்றைப் பயன்படுத்தலாம்.