உள்ளடக்கத்துக்குச் செல்

தத்தா நாராயண் பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தத்தா நாராயண் பாட்டீல் (Datta Narayan Patil) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தத்தாத்ரே பாட்டீல் என்ற பெயராலும் அறியப்படுகிறார். 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் 1988 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 22 ஆம் தேதி வரையும் மீண்டும் 1989 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி முதல் 1990 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 3 ஆம் தேதி வரையிலும் இரண்டு முறை மகாராட்டிர மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார்.[1][2] விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவராகவும் கருதப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

27 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியிலிருந்த தத்தா நாராயண் பாட்டீல் 2011 ஆம் ஆண்டு தனது 84 ஆவது வயதில் இறந்தார்.[3] இவரது மருமகள் மீனாட்சி பாட்டீல் அலிபாக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Leader of Opposition" (PDF). Maharastra Legislative (in மராத்தி).
  2. "MAHARASHTRA LEGISLATURE, MUMBAI" (PDF). Legislative Bodies in India.
  3. "विधानसभेचे माजी विरोधीपक्ष नेते दत्ता पाटील यांचे निधन". Divya Bhaskar (in மராத்தி).
  4. "Former Maharashtra Opposition leader Dattatrey Patil passes away". NetIndian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்தா_நாராயண்_பாட்டீல்&oldid=3840029" இலிருந்து மீள்விக்கப்பட்டது