தடச்சி
Jump to navigation
Jump to search
தடச்சி என்பது ஒருவகைத் தாவரமாகும். இதன் ஆங்கிலப் பெயர் ஃபால்சா (Phalsa) மற்றும் தாவரப் பெயர் கிருவியா ஆசியாடோகா வார் வெஸ்டிடா (Grewia asiatoca var vestita) என்பதாகும். உயரமான மலைப்பகுதிகளில் நன்கு வளரும். இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றது. இப்புதர்ச்செடியிலிருந்து நார் எடுத்து கயிறு தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். இதன் பழங்கள் உண்ணப்படுகின்றன. கருஞ்சிவப்பு கலந்த பழுப்பு நிறப் பழங்கள் மே - ஜூன் மாதங்களில் கிடைக்கின்றன. இப்பழ விதைகள் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு குத்துச்செடியிலிருந்து 5 முதல் 6 கிலோ பழங்கள் கிடைக்கும்.
மருத்துவப் பண்புகள்[தொகு]
- குளிர்ச்சியைத்தரும் தன்மையும், பசியைத் தூண்டுகிற தன்மையும் உண்டு.
- சீரண சக்தியை அதிகரிக்கிறது.
- பழம் தாகத்தை தணிக்கும்.
- உடல் எரிச்சலை குணப்படுத்தும்.
- பித்த மயக்கத்தைப் போக்கும்.
- வீக்கங்களைக் குணப்படுத்தும்.
- இருதயம், இரத்தம் ஆகியவற்றில் உண்டாகும் கோளாறுகளை நீக்கும்.
- தொண்டை நோய்களுக்கு இது நல்லது.
- விக்கலை போக்கும்.
- வயிற்றுப் போக்குக்கு நல்ல மருந்தாகும்.
பட்டை[தொகு]
- சிறுநீர் கோளாறுகளிலிருந்து காக்கும்.
- பெண்ணுப்பில் உண்டாகும் எரிச்சலை அடக்கும்.
- கீல் வாதத்தைக் குணப்படுத்தும்.
- வேர் மற்றும் பட்டை மேகவெட்டையை நீக்கும்.
- இலை பொக்குளங்களை குணப்படுத்தும்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ அர்ச்சுனன், கோ, (2008), மருத்துவத்தில் காய்கனிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ப. 63, 64.