தசங்லு புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தசங்லு புல் (Dasanglu Pul) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இவர் செயல்பட்டார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அயுலியாங்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தசங்லு புல் அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகப் பணிபுரிந்தார்.[1][2][3] அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் எட்டாவது முதலமைச்சாரான கலிகோ புல்லின் மனைவியாக தசங்லு புல் அறியப்படுகிறார்.[4][5] 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதியன்று குவகாத்தி உயர் நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அருணாச்சலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தசங்லு புல்லின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உள்ள தகவல்கள் முழுமையாக இல்லாமல் மறைக்கப்பட்டிருந்த காரணத்தால் இவரது தேர்தல் வெற்றி செல்லாது என அறிவித்தது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. BJP’s Dasanglu Pul wins Anjaw assembly seat in Arunachal Pradesh
  2. Dasanglu Pul wins Hayuliang bypoll[தொடர்பிழந்த இணைப்பு]
  3. PM thanks people for 'continued faith'
  4. BJP fields ex-CM Dasanglu Pul's widow for Arunachal bypoll
  5. Tuki greets Narayansamy,Dasanglu on their victory
  6. "HC declares BJP Arunachal MLA's election null & void for concealing info". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-04-26. பார்க்கப்பட்ட நாள் 2023-04-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசங்லு_புல்&oldid=3847779" இலிருந்து மீள்விக்கப்பட்டது