தசகாரியம் (களந்தை ஞானப்பிரகாசர் நூல்)
தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் களந்தை ஞானப்பிரகாசர் இயற்றிய தசகாரியம் என்னும் நூலே தசகாரியம் பற்றிக் கூறும் நூல்கள் பலவற்றில் அளவில் பெரியது. இந்த நூலாசிரியரின் காலம் காலம் 15 ஆம் நூற்றாண்டு. நூல் 302 பாடல்களைக் கொண்டது. 8 பாயிரப் பாடல்களும், வழிபாட்டு இலக்கணத்தைத் தொகுத்துக்காட்டும் 35 பாடல்களும் இதில் உள்ளன. பின்னர் குரு பூசை, தீக்கை, தத்துவரூபம், சுத்தி, சிவரூபம், தரிசனம், யோகம், போகம் முதலான செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன. வடநூல்களின் பொருள் இதில் மருவுவதாக நூலாசிரியரே தம் அவையடக்கப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். தம் குரு சத்தியஞானி கூறியவற்றைத் தொகுத்துத் தமிழில் கூறுவதாகவும் ஆசிரியரே குறிப்பிட்டுள்ளார். சிவானந்தையர் பதிப்பு (1911), சோமசுந்தர தேசிகர் பதிப்பு எனச் சில பதிப்புகளில் இந்நூல் வெளிவந்துள்ளது. வழிபாடு செய்வதற்கு உரிய முறைகளைக் கற்க விரும்புவோர் கருத்தில் கொள்ளவேண்டிய தகுந்த நேரம், தகுந்த ஆசிரியர் முதலான செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன. தகுந்த ஆசிரியரிடம் தீட்சை பெறுவதை இந்த நூல் வலியுறுத்துகிறது.
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005