தங்கம்-198

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தங்கம் 198 என்பது சிறு தானியம் அல்லது விதை போன்ற அமைப்புடன் கூடிய தங்கத்தின் கதிர் சமபகுதியம் ஆகும். Au128 .திசுக்களில் ஊன்றி இருக்குமாறு அமைத்து மருத்துவம் செய்யப் பயன்படுகிறது. இது முன்பு ரேடான் எவ்வாறு நிரந்திரமாக திசுக்களில் வைத்து மருத்துவம் செய்யப்பட்டதோ அதேபோல் இப்போது தங்கம்-198 பயன்படுத்தப் படுகிறது. தங்கத்துன் அரை ஆயுள் 2.7 நாள்கள். அதுலிருந்து ஒரே ஆற்றல் கொண்ட γ கதிர் -0.412 MeV ஆற்றலுடன் வெளிப்படுகிறது. 0.96 MeV உச்சஆற்றலுடன் β துகள்களும் வெளிப்படுகின்றன. ஆனால் இந்த β துகள்கள் 0.1m.m. கனம் கொண்ட சுவர் ( விதையைச் சுற்றி இருப்பது) தடுத்து நிறுத்தி விடுகிறது. ஒரு தங்க விதை 2.5m.m நீளமும் 0.8m.m விட்டமும் கொண்டுள்ளது. இதனுடைய குறைந்த γ கதிர் ஆற்றல் அதனை கையாழுபவர்களுக்கு போதிய பாதுகாப்ப்னைக் கொடுக்கிறது.இது ரேடானைப் பொறுத்தவரை அவ்வளவு எளியதில்லை.( தற்போது ரேடான் பயன் பாட்டில் இல்லை.) மேலும் ரேடானின் குறைந்த ஆற்றல் கொண்ட γ கதிர்கள் பல வருடங்கள் வெளிப்பட்டுக் கொண்டுள்ளன. ரேடானிலிருந்து வெளிப்படும் அதிக ஆற்றலுள்ள β கதிர்கள் , சேய்தனிமத்தில் இருந்தும் வெளிப்படுகின்றன.இது புற்று நோயினையும் தோற்றுவிக்கலாம். இதனைத் தவிர்க்கவே இப்போது தங்கம் 198 பயன் படுத்தப் படுகிறது. ஐயோடின்-125 யும் இப்போது வெகுவாகப் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்-198&oldid=1588764" இலிருந்து மீள்விக்கப்பட்டது