தகழி தர்ம சாஸ்தா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகழி தர்ம சாஸ்தா கோயில் இந்தியாவில், கேரள மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள தகழியில் அம்பலப்புழாவில்[1] இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் மூலவர் சாஸ்தா (ஐயப்பன்) ஆவார். இவர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். இக்கோயிலில் துணைத்தெய்வங்கள் இல்லை.

உருவாக்கம்[தொகு]

இக்கோயிலுக்கான சிலை ஒருமுறை பரசுராமரால் ஓதரா என்ற மலையில் நிறுவப்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக சிலை பண்ணைக்கு இடம் மாறிச் சென்றது. அங்கிருந்த ஒரு மந்திரவாதி சிலையைக் கண்டுபிடித்து அதனை வில்வமங்கலம் சுவாமி'யிடம் நிறுவுவதற்காகக் கொடுத்தார். அதன் சக்தியை உணர்ந்த வில்வமங்கலம் சுவாமி, உடையார்க்கன் என்ற முனிவரிடம் கொடுத்தார். அந்த முனிவர் அச்சிலையை சிலையை நிறுவினார். செம்பகச்சேரி மன்னர் அதற்கான கோயிலைக் கட்டினார்.மணயதட்டு தாந்திரீக சடங்குகளின் அடிப்படையில் அங்கு தொடர்ந்து ஐந்து பூஜைகள் வழங்கப்படுகின்றன.

திருவிழாக்கள்[தொகு]

இங்கு எட்டு நாள் திருவிழா கும்பம் மாதத்தில் நடைபெறுகிறது. இது ஆராட்டுடன் நிறைவடைகிறது. களமெழுத்துப்பட்டு விழா 41 நாட்கள் கொண்டாடப்படுகிறது. களபாபிஷேகம் தனு 1ஆம் நாள் ஆரம்பித்து 11 நாள்கள் கழித்து நிறைவடைகின்ற மற்றொரு விழாவாகும்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகழி_தர்ம_சாஸ்தா_கோயில்&oldid=3825602" இலிருந்து மீள்விக்கப்பட்டது