டோல்மென் தி சோட்டோ

ஆள்கூறுகள்: 37°21′08″N 06°45′05″W / 37.35222°N 6.75139°W / 37.35222; -6.75139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோல்மென் டி சோட்டோவில் உள்ள பாதை

டோல்மென் தி சோட்டோ (Dolmen de Soto) என்பது எசுப்பானியாவின் அந்தலூசியாசியாவில் உள்ள ஒரு புதிய கற்கால நிலத்தடி அமைப்பாகும். இது 4,500 மற்றும் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1][2][3] மேலும் இது ஊயில்வா மாகாணத்தில் உள்ள சுமார் 200 கற்கால புதைக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். [3]

டோல்மென் தி சோட்டோவின் மேற்பரப்பு

1922 ஆம் ஆண்டு தனது தோட்டமான லா லோபிடாவில் ஒரு புதிய வீட்டைக் கட்ட ஆரம்பிக்கும்போது, அர்மாண்டோ டி சோட்டோ மொரில்லாஸ் என்பவரால் இந்த தளம் கண்டுபிடிக்கப்பட்டது.[4] அதே ஆண்டு புதைகுழியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்பட்டன மேலும் 1924 வாக்கில் ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கியூகோ ஓபர்மேயர் இங்கு சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.[5] ஒபர்மேயர் எட்டு புதைக்கப்பட்ட உடல்களை முதிர்கரு நிலையில் கண்டுபிடித்தார் அதைத் தொடர்ந்து அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் மற்றும் இறுதிச் சடங்கு நடந்த இடத்தின் சிறப்பியல்புகளை விவரிக்கும் ஒரு புத்தகத்தை ஓபர்மேயர் வெளியிட்டார். [5] 1931 ஆம் ஆண்டில் இது எசுப்பானியாவின் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. [5] ஆனால் 1987 ஆம் ஆண்டு வரை அது ஒரு தனியார் சொத்தாக இருந்தது. பிறகு, அது எசுப்பானியாவின் கலாச்சார அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குள் சேர்க்கப்பட்டது. [3] சமீபத்தில், போர்த்துகீசிய/எசுப்பானிய/வேல்சு குழுவான பர்ஸ்ட் ஆர்ட் குழு, நினைவுச்சின்னத்தின் பாதை மற்றும் அறை பகுதிகளுக்குள் நிற்கும் பொறிக்கப்பட்ட மற்றும் வர்ணம் பூசப்பட்ட நிமிர்ந்து நிற்கும் பாதைக்குள் ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டது. முடிவுகள் ஒரு தனித்துவமான பொருளை வெளிப்படுத்தின. முடிவுகள் ஒரு பெரிய தன்க் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கட்டுரையாக, பிராட்ஷா அறக்கட்டளை இணையதளத்தில் சுருக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

நுழைவாயிலை நோக்கியப் பார்வை

கலைப்பொருட்கள் மற்றும் வேலைப்பாடுகள்[தொகு]

பொறிக்கப்பட்ட கற்கள்

கண்டுபிடிக்கப்பட்ட எட்டு புதைக்கப்பட்ட உடல்கள் ஒவ்வொன்றும் முதிகரு நிலையில் இருந்தன. மேலும் அவற்றின் அருகிலேயே சில கலைப்பொருட்களும் இருந்தன. கத்திகள், கோப்பைகள் மற்றும் கடல் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள் மற்ற தளங்களில் காணப்படுவதைப் போல ஏராளமாக இல்லை; எனவே, டோல்மென் டி சோட்டோ நீண்ட காலமாக பயன்படுத்தப்படவில்லை என்று கருதப்படுகிறது. 43 நிற்கும் கற்களில் வேலைப்பாடுகள் காணப்பட்டன. மேலும் மனிதர்கள், கோப்பைகள், கத்திகள், [3] மற்றும் எளிய கோடுகள் அல்லது வட்டங்கள் போன்ற வடிவியல் வடிவங்களை விவரிக்கின்றன. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A 5,000-year-old mystery: recording rock art within the Dolmen de Soto". World Archaeology (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-05-22. பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
  2. 2.0 2.1 Ramos, Javier. "Dolmen de Soto: Stonehenge en España". www.lugaresconhistoria.com (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-18.
  3. 3.0 3.1 3.2 3.3 Collado, Hipolito (29 July 2020). "Illuminating the Realm of the Dead: The Rock Art within the Dolmen de Soto, Andalucía, Southern Spain". Bradshaw Foundation. Archived from the original on 2020-09-20. பார்க்கப்பட்ட நாள் 2021-05-18.
  4. Información, Huelva (2021-04-18). "Dolmen de Soto. Una joya del megalitismo en la Huelva de inicios del siglo XX". Huelva Información (in ஐரோப்பிய ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.
  5. 5.0 5.1 5.2 Prehistórico, Caminos de Arte Rupestre. "Dolmen de Soto". www.prehistour.eu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-14.


"https://ta.wikipedia.org/w/index.php?title=டோல்மென்_தி_சோட்டோ&oldid=3818485" இலிருந்து மீள்விக்கப்பட்டது