டோகுமெய் சென்டாய் கோ-பஸ்டர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டோகுமெய் சென்டாய் கோ-பஸ்டர்ஸ் (特命戦隊ゴーバスターズ Tokumei Sentai Gōbasutāzu?) (தமிழ்ப்பொருள்: சிறப்புப்பணிகள் அணி உளவுவீரர்கள்) என்பது 36வது சூப்பர் சென்டாய் தொடர் ஆகும். பிப்ரவரி 26, 2012 அன்று தொடங்கப்பட்ட இத்தொடர் உளவு மற்றும் சைபர் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இத்தொடரைத் தழுவி எடுக்கப்பட்ட பவர் ரேஞ்சர்ஸ் பீஸ்ட் மார்பர்ஸ் என்ற தொடர் நிக்கலோடியன் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

கதைச்சுருக்கம்[தொகு]

புதிய பொது யுகம் (新西暦 Shinseireki) நாட்காட்டியில் பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு எனிட்ரான் என்ற ஆற்றல் மூலத்தை கட்டுப்படுத்தி வந்த ஒரு கணினியை மெசியா என்ற தீய வைரஸ் பாதித்தது. அதனால் ஆற்றல் மேலாண்மை மையத்தில் நடந்த விபத்தில் இருந்து மூன்று குழந்தைகள் உயிர்பிழைத்தனர். அதன்மூலம் அவர்கள் வலிமை பெற்று உளவு வீரர்களாக மாறினர். அந்த மெசியா மனித குலத்தைக் கட்டுப்படுத்தவும் இயந்திர உலகை உருவாக்கவும் விரும்பினான். பிறகு விஞ்ஞானிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து மெசியாவை வேறு உலகில் அடைத்து விட்டனர். இப்போது புதிய பொது யுக வருடம் 2012ல் என்டர் என்ற ஒருவன் வாக்லாஸ் என்ற தீய அணியை வழிநடத்தி தன் தலைவன் மெசியாவை விடுவிக்க முயல்கிறான். அந்த அணியிடம் இருந்து உலகைக் காக்க உளவு வீரர்கள் அணி போராடுகிறது. இறுதியாக அவர்கள் போராடி என்டரை அழிக்கின்றனர்.[1]

கதாபாத்திரங்கள்[தொகு]

உளவுவீரர்கள் அணி[தொகு]

 • ஹிரோமு சக்குராடா- ரெட் பஸ்டர்
 • ரியூஜி இவாசாகி- ப்ளூ பஸ்டர்
 • யோகோ உஸாமி- யெல்லோ பஸ்டர்
 • மசாடோ ஜின்- பீட் பஸ்டர்
 • பீட் ஜே. ஸ்டாக்- ஸ்டாக் பஸ்டர், வண்டு ரோபோ, மசாடோவின் ரோபோ
 • சீடா நிக்- சிறுத்தை ரோபோ, ஹிரோமுவின் ரோபோ
 • கோரிசாகி பனானா- கொரில்லா ரோபோ, ரியூஜியின் ரோபோ
 • உசாடா லெட்டியூஸ்- முயல் ரோபோ, யோகோவின் ரோபோ

வாக்லாஸ் அணி[தொகு]

 • மெசியா- தலைவன்
 • என்டர்- மெசியா உருவாக்கிய அவதாரம்
 • எஸ்கேப்- மெசியா உருவாக்கிய அவதாரம்
 • பக்லர்கள்- வீரர்கள்
 • மெடலாய்டுகள்- அரக்கர்கள்
 • மெகாசோர்டுகள்- மிகப்பெரிய ரோபோக்கள்

மேற்கோள்கள்[தொகு]

 1. Hyper Hobby, February 2012