உள்ளடக்கத்துக்குச் செல்

டையஸ்கோரடீஸ் ஆவணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வியன்னாவின் டையஸ்கோரடீஸ் ஆவணம் டையஸ்கோரடீசால் எழுதப்பட்ட 6வது நூற்றாண்டினைச் சேர்ந்த மருத்துவ அறிவியல் நூலாகும். இது பண்டைய அறிவியல் நூலுக்கான அறிய எடுத்துக்காட்டகும். 491 விலங்குத்தோல் பக்கங்களில் 400க்குமதிகமான விலங்குகளதும் நிலைத்திணைகளதும் வரைப்படங்கள் காண்ப்படுகின்றன. இவ்வாவணம் கி.பி 515 இல் பைசன்டைன் இளவரசியும் பேராரசர் அனிசியசு ஒப்லிபிரிசின் மகளுமான யூலியானா அனிசியாவுக்காக ஆக்கப்பட்டது. இது 37 சதமமீட்டர் நீளமும் 30 சதமமீட்டர் அகலத்தையும் கொண்டது. இளவரசிக்காக ஆக்காப்பட்டாலும் பின்வநத நூற்றாண்டுகளில் வைத்தியசாலை கைநூலாக பயனபடுத்தப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன. இந்நூலில் சில விளக்கங்கள் அரபு மொழியில் காணப்படுகின்றன. டைஸ்கோரடிசின் உரைக்கு மேலதிகமாக இந்நூலில் Carmen de herbis எனப்பட்ட பிளதெல்பியாவின் தைனோசியசின் நிலைத்திணைப்பற்றிய ஆவணமும், நீகண்டரின் பாம்புக்கடிகான மருந்துகளின் ஆவனமும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

படத்தொகுப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vienna Dioscurides
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=டையஸ்கோரடீஸ்_ஆவணம்&oldid=1349800" இலிருந்து மீள்விக்கப்பட்டது