டைதயோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டைதயோல் (Dithiol) என்பது இரண்டு தயோல் வேதி வினைக்குழுக்களைப் பெற்றுள்ள ஒரு கரிமகந்தக சேர்மமாகும். கரைதிறன், நெடி, ஆவியாதல் போன்ற இயற்பியல் பண்புகளில் மோனோதயோலின்களின் பண்புகளுடன் டைதயோலின் பண்புகளும் ஒத்துள்ளன. ஒரு கரிமச் சேர்மத்தில் இரண்டு தயோல் குழுக்களும் அவை இடம்பெற்றுள்ள இடத்தைப் பொறுத்து வெவ்வேறு வகையாக வகைப்படுத்தப்படுகின்றன.

ஒரேயணு டைதயோல்கள்[தொகு]

ஒரேயணு டைதயோல்கள் என்பவை RR'C(SH)2 என்ற பொதுவாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும். ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்கள் மீது ஐதரசன் சல்பைடு செயல்பட்டு இவை வழிப்பெறுதியாக உருவாகின்றன. இவற்றின் நிலைப்புத்தன்மை அவற்றின் அரிய உருவாகும் தன்மைக்கேற்ப மாறுபடுகின்றன. மெத்தேன்டைதயோல், 1,1-எத்தேன்டைதயோல், 1,1-வளையயெக்சேன்டைதயோல் உள்ளிட்ட தயோல்கள் இதற்கு எடுத்துக்காட்ட்டுகளாகும். சூடுபடுத்தினால் ஒரேயணுடைதயோல்கள் ஐதரசன் சல்பைடை வெளியிட்டு நிலைமாறும் தயோகீட்டோன் அல்லது தயாலை கொடுக்கின்றன. இவை குறிப்பாக சில்படிமங்களாக மாற்றப்படுகின்றன[1]

1,2-டைதயோல்கள்[தொகு]

அடுத்தடுத்த கார்பன் மையங்களின் மீது தயோல் குழுக்கள் இடம்பெற்றிருக்கும் சேர்மங்கள் 1,2-டைதயோல்கள் எனப்படுகின்றன. 1,2-எத்தேன் டைதயோலும் 1,2-பென்சீன்டைதயோலும் ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களுடன் வினைபுரிந்து 1,3-டைதயோலேன்களைக் கொடுக்கின்றன.

(HS)2C2H4 + RCHO → RCHS2C2H4 + H2O

1,3-டைதயோல்கள்[தொகு]

1,3-புரோப்பேன்டைதயோல் என்ற சேர்மமே இவ்வகைச் சேர்மங்களின் தொடரில் இடம்பெற்றுள்ள முதலாவது சேர்மமாகும். கரிமவேதியியலில் ஒரு வினைப்பொருளாக 1,3-புரோப்பேன்டைதயோல் பயன்படுத்தப்படுகிறது. 1,3-புரோப்பேன்டைதயோல் ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களுடன் வினைபுரிந்து 1,3-டைதயேன்களை உருவாக்குகிறது. ஆல்டிகைடுகளிலிருந்து வழிப்பெறுதியாகக் கிடைக்கும்போது மெத்தைன் C-H குழு போதுமான அளவுக்கு அமிலத்தன்மையுடன் காணப்படுவதால் இதை புரோட்டான் நீக்கம் செய்து விளையும் எதிர்மின் அயனியை கார்பனுக்கு அல்கைலேற்றம் செய்கிறது. தலைகீழ் முனைவாக்கத்திற்கான அடிப்படைச் செயல்முறையாக இது கருதப்படுகிறது.[2]

1,2-எத்தேன்டைதயோல்களைப் போல புரோப்பேன் டைதயோலும் உலோகங்களுடன் சேர்ந்து அணைவுச் சேர்மங்களை உருவாக்குக்கிறது:

Fe3(CO)12 + C3H6(SH)2 → Fe2(S2C3H6)(CO)6 + H2 + Fe(CO)5 + CO

டையைதரோலிப்பாயிக் அமிலம் இயற்கையாகத் தோன்றும் ஒரு 1,3-டைதயோல் ஆகும்.

1,4-டைதயோல்கள்[தொகு]

டைதயோ திரய்டால் (HSCH2CH(OH)CH(OH)CH2SH) ஒரு பொதுவான 1,4-டைதயோல் ஆகும். சில சமயங்களில் இதை கிலிலேண்டு வினைப்பொருள் என்றும் அழைப்பர். புரோட்டீன் டைசல்பைடு இணைப்புகளை டைதயோல்களாக மாற்ற இதனுடைய ஆடியெதிர் மாற்றியன் பயன்படுகிறது. டைதயோ திரய்டாலை ஆக்சிசனேற்ற வினையில் ஈடுபடுத்தினால் உட்புற டைசல்பைடு பிணைப்புடன் கூடிய நிலையான ஆறு உறுப்பு பல்லினவளையம் கிடைக்கிறது.

டைசல்பைடு பிணைப்பு டைதயோ திரய்டால் சேர்மத்தால் இரண்டு வரிசைமுறை தயோல்-டைசல்பைடு பரிமாற்ற வினைகளின் செயலாக்கத்தால் ஒடுக்கப்படுகிறது
.

மேற்கோள்கள்[தொகு]

  1. Cairns, T. L.; Evans, G. L.; Larchar, A. W.; McKusick, B. C. (1952). "gem-Dithiols". Journal of the American Chemical Society 74: 3982-9. doi:10.1021/ja01136a004. 
  2. "1,3-Propanedithiol". Encyclopedia of Reagents for Organic Synthesis (Ed: L. Paquette). (2004). J. Wiley & Sons, New York. DOI:10.1002/047084289. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைதயோல்&oldid=2750168" இருந்து மீள்விக்கப்பட்டது