உள்ளடக்கத்துக்குச் செல்

டைகுளோரோபியூட்டேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைகுளோரோபியூட்டேனின் 1,4 மாற்றியன்

டைகுளோரோபியூட்டேன் (Dichlorobutane) என்பது C4H8Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தின் உள்ளமைப்பு மாற்றியப் பொது கட்டமைப்புக்குள் ஒன்பது உள்ளமைப்பு மாற்றியன்கள் அடங்கியுள்ளன. இவற்றுள் 5 பொருட்கள் ஒளியியல் மாற்றியப் பண்பு கொண்டவையாகும். குளோரோபியூட்டேனை தனியுறுப்பு குளோரினேற்றம் செய்தல் அல்லது பியூட்டேன்டையாலை அணுக்கரு கவர் வினைக்கு உட்படுத்துதல் போன்ற குளோரோ ஆல்க்கேன்கள் தயாரிக்கும் பொதுத் தொகுப்பு முறையிலேயே இதுவும் தயாரிக்கப்படுகிறது.

டைகுளோரோபியூட்டேன் மாற்றியன்கள் பல்வேறு தொழிற்சாலை மற்றும் ஆய்வகங்களில் கரிமத் தொகுப்பு வினைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அடிப்போநைட்ரைல் வழியாக நைலான் 6,6 தயாரிப்பில் முன்னோடிச் சேர்மமாக 1,4-டைகுளோரோபியூட்டேன் பயன்படுத்தப்படுகிறது [1]. இது தவிர டெட்ராஐதரோபியூரான் தயாரிக்கவும் இச்சேர்மம் பயன்படுகிறது [2]. 2,3- டைகுளோரோபியூட்டேனிலிருந்து குளோரோபிரீன் உற்பத்தி செய்யப்படுகிறது [3].

குளோரோ ஆல்க்கேன்களில் டைகுளோரோபியூட்டேன்கள் பொதுவாக எரிச்சலூட்டுபவை மற்றும் எளிதில் தீப்பற்றி எரியக்கூடியவையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mark S. M. Alger (1997). In Polymer Science Dictionary. Springer. p. 241. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-412-60870-7. Google Book Search. Retrieved on August 28, 2008.
  2. Process for the preparation of tetrahydrofuran. Retrieved on August 28, 2008.
  3. Process for the production of 2-chlorobutenes from 2,3-dichlorobutane. Retrieved on August 28, 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைகுளோரோபியூட்டேன்&oldid=2697171" இலிருந்து மீள்விக்கப்பட்டது