டெட்ராதயோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெட்ரா தயோனேட்டு எதிர்மின் அயனி

டெட்ராதயோனேட்டு (Tetrathionate) என்பது S4O2−6 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஓர் எதிர்மின் அயனியாகும். H2S4O6 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட டெட்ராதயோனிக் அமிலத்திலிருந்து வழிப்பெறுதியாகப் பெறப்படும் கந்தக ஆக்சோ எதிர்மின் அயனியாக இது கருதப்படுகிறது. இவ்வயனியில் இடம்பெற்றுள்ள கந்தக அணுக்களில் இரண்டு 0 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் இரண்டு அணுக்கள் +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் உள்ளன. மாறாக இச்சேர்மம் S2−2 வை SO3.உடன் பிணைப்பதால் உருவாகும் கூட்டு விளைபொருளாகவும் பார்க்கப்படுகிறது. [Sn(SO3)2]2− என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட பல்தயோனேட்டு எதிர்மின் அயனிகளின் குடும்பத்தில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.[1]. இதனுடைய ஐயுபிஏசி பெயர் [சல்போனேட்டோடைசல்பேனைல்)சல்போனேட்டு என்பதாகும். இதனுடன் தொடர்புடைய அமிலம் (சல்போடைசபேனைல்) சல்போனிக் அமிலம் ஆகும். டெட்ராதயோனெட்டின் சிஏஎசு எண் 15536-54-6 என்று வேதித் தொகுப்புகள் நிறுவனம் அடையாளப்படுத்துகிறது.

உருவாக்கம்[தொகு]

தயோசல்பேட்டை (S2O2−3) அயோடினால் ஆக்சிசனேற்றம் செய்து இதைத் தயாரிக்கிறார்கள்.

2S
2
O2−
3
+ I2S
4
O2−
6
+ 2I

கட்டமைப்பு[தொகு]

டெட்ராதயோனேட்டு அயனியின் கட்டமைப்பு டெட்ராதயோனேட்டு அயனியின் பந்து-குச்சி மாதிரி

டெட்ராதயோனேட்டின் கட்டமைப்பு படத்தில் காட்டப்பட்டுள்ளது போல ஒரு கனசதுரத்தின் மூன்று மூலைகளாகப் பார்க்கப்படுகிறது. BaS4O6•2H2O , Na2S4O6•2H2O. சேர்மங்களிலுள்ள S4O2−6 போன்ற எலக்ட்ரான் ஒழுங்கமைவு இக் கட்டமைப்பில் உள்ளது. இருமுக S–S–S–S கோணங்கள் 90° கோணத்திற்கு அருகில் இருப்பது பல்சல்பைடுகளில் பொதுவாகக் காணப்படும் கோண அளவாகும்.

சேர்மங்கள்[தொகு]

சோடியம் டெட்ராதயோனேட்டு, (Na2S4O6) , பொட்டாசியம் டெட்ராதயோனேட்டு (K2S4O6), பேரியம் டெட்ராதயோனேட்டு (BaS4O6•2H2O) உள்ளிட்டவை டெட்ராதயோனேட்டு சேர்மங்களாகும்.

பண்புகள்[தொகு]

இடைநிலை ஆக்சிசனேற்ற நிலையில் தயோசல்பேட்டு போன்ற மற்ற கந்தக இனச்சேர்மங்களைப் போல டெட்ராதயோனேட்டும் கரிம எஃகு மற்றும் துருவேறா எஃகு போன்றவற்றில் உண்டாகும் பள்ள அரிப்புக்கு காரணமாகிறது. சால்மோனெல்லா டைபிமியூரியம் வகை பாக்டீரியாக்களுக்கான விளிம்பு நிலை எலக்ட்ரான் ஏற்பியாக டெட்ராதயோனேட்டு உதவுகிறது. அதேசமயத்தில் பாலூட்டிகளின் உட்குழல் பகுதிகளில் காணப்படும் தயோசல்பேட்டு வினைத்திற ஆக்சிச இனங்களால் ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது. இவ்வினங்கள் குறிப்பாக டெட்ராதயோனேட்டாக உருவாகும் நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூக்ளியோடைடு பாசுப்பேட்டு ஆக்சிடேசு நொதியால் உற்பத்தியாகும் மீயாக்சைடால் வெளியிடப்படுகின்றன. அழற்சி செயல்பாடு மூலமாக பாக்டீரியம் வளர்வதற்கு இது உதவிபுரிகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. Winter, Sebastian E. "Gut Inflammation Provides a Respiratory Electron Acceptor for Salmonella." Nature, 23 Sept. 2010. Web. 28 Mar. 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்ராதயோனேட்டு&oldid=2749859" இலிருந்து மீள்விக்கப்பட்டது