டெட்ராகுளோரோசிங்கேட்டு
டெட்ராகுளோரோசிங்கேட்டு (Tetrachlorozincate) என்பது [ZnCl4]2− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் எதிர்மின் அயனியாகும். இந்த எதிர் அயனி பெரும்பாலும் வலிமையான மின்னணுகவர்களுடன் சேர்க்கப்பட்டே பயன்படுத்தப்படுகிறது. இரட்டை எதிர்மின் அயனியாக இருப்பதால் டெட்ராகுளோரோசிங்கேட்டு எதிர்மின் அயனியை வலிமை குறைந்த ஒருங்கிணைவு அயனியென்று வகைப்படுத்துவதில்லை. அதேபோல இரட்டை எதிர்மின் அயனியாக இருப்பதால் இது பல உப்புகளின் படிகமாதலை எளிமையாக்குகிறது. டெட்ராகுளோரோசிங்கேட்டு ஒரு நான்முகியாகும். சிங்கேட்டுகள் என்பவை எதிர்மின் துத்தநாக அணைவுச் சேர்மங்களாகும்.
லூக்காசு வினையாக்கியை தயாரிக்கும் நிகழ்வில் பெரும்பாலும் ஐதரோகுளோரிக் அமிலத்துடன் துத்தநாக குளோரைடைச் சேர்த்து டெட்ராகுளோரோசிங்கேட்டு தயாரித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வயனியுடன் தொடர்புடைய ஒர் எதிர்மின் அயனி [Zn2Cl6]2− ஆகும். இதிலும் Zn(II) நான்முகி வடிவத்தையே ஏற்றுக் கொள்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ I. Sotofte, R. G. Hazell, S. E. Rasmussen (1976). "Hexaacetonitrilenickel(II) tetrachlorozincate. A crystal structure with serious overlap in the Patterson function". Acta Crystallogr.,Sect.B:Struct.Crystallogr.Cryst.Chem. 32: 1692. doi:10.1107/S0567740876006249.
- ↑ F. A. Cotton, S.A.Duraj, W.J.Roth (1985). "Two Compounds Containing the Tris(μ-chloro)hexakis(tetrahydrofuran)divanadium(II) Cation. Preparation, Structures, and Spectroscopic Characterization". Inorg. Chem. 24: 913. doi:10.1021/ic00200a023.